Type Here to Get Search Results !

ஆசிரியர்களுக்கான மொடியூல் 02

ஆசிரியர்களின் ஒழுக்க விழுமியங்கள்

ஆசிரியரின் வாண்மைத்துவம், கற்றல் கற்பித்தல் பாங்கு மற்றும் கூட்டுப் பொறுப்பு.

வகிபாகம் என்பதனால் கருதப்படுவது யாது?

“எந்தவொரு மனிதனுக்கும் அவர் சேவையாற்றுகின்ற நிறுவனத்தில் அல்லது அமைப்பில் தனக்கு கிடைத்துள்ள பதவிக்கு ஏற்ப அவரால் ஆற்றப்படல் வேண்டும் என அந்த அமைப்பினுள் சேவை ஆற்றுகின்ற மற்றும் அங்கிருந்து சேவை பெறுகின்ற சகலருக்கும் எதிர்பார்க்கின்ற வழிகாட்டல் தனியாளுக்குரிய வகிபாகம் என எளிதாகப் பொருள் கொள்ளலாம்." (பீ.விஜேசிரி குணசேகர)

வகிபாகத்தாளர் ஒருவரின் வேலை செய்யும் விதம், ஆளிடைத் தொடர்பு, சமூக உணர்வுகள், இரக்கசிந்தனை, பேச்சு, நடத்தை ஆகியன தொடர்பான பிரதி மாற்றங்கள் வகிபாகமொன்றின் அல்லது அதன் பழக்க வழக்கங்களின்பாலும் தாக்கம் செலுத்தும். (பீ.விஜேசிரி குணசேகர - பாடசாலை முகாமைத்துவமும் புதிய செல்நெறிகளும் உபாயங்களும்)

ஆசிரியரது வகிபாகம் என்பதனால் நீர் கருதுவது யாது?

கற்பித்தல் செயன்முறையை நெறிப்படுத்துபவர் என்ற வகையில் ஆசிரியரின் பொறுப்புக்கள், அதிகாரங்கள், கடமைகள், ஒழுக்கம் ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியதே ஆசிரியரது வகிபாகம் ஆகும்.

ஆசிரியரது வகிபாகம் வகுப்பறைக்கோ அல்லது பாடசாலைக்கோ வரையறுக்கப்பட்டதல்ல. மாறாக வகுப்பறைக்கு வெளியேயும் மாணவரிடமும், பாடசாலைக்கு வெளியே பெற்றோர் மற்றும் சமுதாயத்தனரிடமும், ஏனைய ஆசிரியர்களுடனும், ஆசிரியர்களல்லாத வேறு அதிகாரிகளுடனும், குழுக்களுடனும் என்றவாறாக பல்வேறு சமூகக்குழுக்கள் மற்றும் சந்தர்ப்பங்களுடன் தொடர்புடைய பணிகள் இதில் அடங்கும்.

உலகத்தின் எப்பகுதியிலும் ஆசிரியர் சமூக அந்தஸ்த்து உள்வராக கணிக்கப்படுவர். "கல்வி என்பது ஆசிரியராகும்: ஆசிரியர் என்பது கல்வியாகும்"

ஆசிரியரின் வகிபாகத்துடன் தொடர்புடைய இயல்புகளும் பண்புக்கூறுகளும்.

  1. ஆசிரியரது வகிபாகத்தில் பொறுப்புக்கள், அதிகாரங்கள், கடமைகள், ஒழுக்கங்கள் ஆகியன அடங்கியுள்ளன.
  2. ஆசிரியரது வகிபாகம் நிலைபேறானதல்ல. அது இயக்கத்தன்மை உடையதாகும்.
  3. அந்தந்தச் சமூகத்திற்கும், காலத்திற்கும் அமைய ஆசிரிய வகிபாகம் வேறுபடும்.
  4. ஆசிரியரது வகிபாகம் வெவ்வேறு பாத்திரங்கள் மற்றும் பண்புக் கூறுகளை உள்ளடக்கியது.
  5. ஆசிரியரது வகிபாகத்தைத் தீர்மாணிக்கையில் மாணவரது எதிர்பார்ப்புக்கள், மேற்பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்கள் ஆகியன செல்வாக்குச் செலுத்தும்.
  6. ஆசிரியரது வகிபாகம் வகுப்பறைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல. அது வகுப்பறை உட்பட பாடசாலையினுள்ளும் பாடசாலைக்கு வெளியேயும் பரந்து செல்லும்.
  7. ஆசிரியரது வகிபாகமானது நேரடியாகவும் மறைமுகமாகவும், குறுகிய கால ரீதியிலும், தனியாளினது விருத்தியிலும் சமூக விருத்தியிலும் பங்களிப்புச் செய்யும்.
  8. அதற்கமைய வகுப்பறையில் இருக்கும் ஆசிரியரது பணிகளில் செல்வாக்குச் செலுத்தும் தனியாட்கள், நிறுவனங்கள்,குழுக்கள் ஆகியவற்றைப் பின்வருமாறு எடுத்துக்காட்டலாம்.

ஆசிரியரது பணியை பிரதானமான சில பரப்புக்களின் ஊடாக இனங்கண்டு கொள்ளலாம்.

  • வகுப்பறையின் ஒட்டமொத்தச் செயன்முறையுடன் தொடர்புடைய பணிகள்.
  • ஓட்டுமொத்த பாடசாலையுடன் தொடர்புடைய பணிகள்.
  • பாடசாலைக்கு வெளியேயானவை.
மேற்படி பரப்புக்களினூடாக இனங்கண்ட பணிகளை மீண்டும் பரந்த வகையில் சிறப்பாக இனங்காணலாம். இது ஆசிரியரது வகிபாகத்தில் சிக்கல் தன்மையைக்காட்டுகிறது.

ஆசிரியரது வகிபாகத்தினுள் ஆசிரியர், பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய பல பாத்திரங்கள் உள்ளன என கல்வியியலாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
உதாரணம் :- எரிக் சொயில் என்பவரால் முன்வைக்கப்பட்ட பாகுபாடு
  • தொழில் சார் வகிபாகம் (கற்றல்-கற்பித்தல் செயன் முறையுடன் தொடர்புடைய வகிபாகம்)
  • சமூகம் சார்ந்த வகிபாகம் (சமூகத்தில் பல்வேறு பதவிகள் வகித்தல், தொடர்புகளைப் பேணல் மூலம் உருவாகும் வகிபாகம் )
ஆசிரியரது சமூக வகிபாகம் :

"ஆசிரியர் ஒரு சமூக விலங்கு" ஆவார். ஆசிரியரது தொழில் சார் (வாண்மை) வகிபாகமும் சமூக வகிபாகமும் முக்கியமானவை. அவர் பல்வேறு சமூகப் பொறுப்புக்களை வகிப்பார். வகுப்பறையிலும் பாடசாலையிலும் வெவ்வேறு ஆட்கள் மற்றும் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுபவர் மாத்திரமன்றி பாடசாலைக்கு வெளியே வேறு ஆட்கள் மற்றும் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுவார்.

முற்காலத்தில் ஆசிரியர் அறிவாளியாக அதிகம் கற்ற ஒருவராகக் கருதப்பட்டமையால் அவரது சமூக வகிபாகமானது பெரும்பாலும் ஏனையோருக்கு முன்மாதிரியாக அமைபவராக, வழிகாட்டுபவராக, அவர்களை நெறிப்படுத்துபவராக அமைந்தது.

இவ்வாறு மதிப்புப் பெற்றிருந்த கௌரவத்திற்கு ஆளாகியிருந்த ஆசிரிய வகிபாகமானது சமூக மாற்றங்களுடன் கூடவே மாற்றமடையத் தொடங்கியது.
  • சமூகத்தின் தேவைகள் சிக்கலடைந்தமை
  • நகரமயமாக்கம்
  • பூகோளமயமாக்கம்
  • கல்வியில் நலன்புரிகை மற்றும் முதலீட்டு முனைப்பு
  • தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் விருத்தி காரணமாக ஆசிரியரது கௌரவம், கணிப்பு, சமூகம் தொடர்பான அவரது பொறுப்புக்கள், செய்கை போன்றன யாவும் மாற்றமடையத் தொடங்கின.


ஆசிரியர் தமது வகிபாகத்தினை ஆற்றும் போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் அல்லது முரண்பாடுகள்

எந்தவொரு சமூகத்திலும் ஒரு தனியாள் பல்வேறு பதவிகளை வகிப்பதுண்டு. ஆசிரியரும் அதற்கு விதிவிலக்கானவரல்ல. இந்த ஒவ்வொரு பதவிக்குமுரிய பொறுப்புக்கள், அதிகாரங்கள், கடமைகள், ஒழுக்கக் கோவை என்பன உண்டு. இப்பதவிகளை வகிக்கும் போது வெவ்வேறு ஆட்களுடனும் அல்லது தரப்பினருடனும் அவர்களது எதிர்பார்ப்புக்களுடன் முரண்பட இடமுண்டு. எனவே ஆசிரியர் பல்வேறு வகிபாக முரண்பாடுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அம்முரண்பாடுகளை எதிர்கொள்ளல், தீர்த்தல் என்பன அவ்வகிபாகத்தை வகிப்பவரது ஆளுமையுடனும், நடத்தையுடனும் நேரடியாகத் தொடர்புபடும்.

வகிபாக ஆளுமை முரண்பாடு

  • வகிபாகத்தின் தேவைகளுக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்புக்களுக்கும் இடையிலான பொருத்தப்பாடின்மை காரனமாக முரண்பாடு தோன்றுதல்.
  • உதாரணம் பாடசாலையில் கற்பித்தல் வலியுறுத்தப்படுகின்றமையால் வீட்டில் ஏனையோருடன் தொடர்புகள் குறைவடைதல்
  • வகிபாக முரண்பாடுகள் ஒருகாலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட -- வகிபாகங்களை வகிக்க வேண்டியுள்ளமையால் ஏற்படும் பிரச்சனை.


வாண்மையாளராக ஆசிரியரது பொறுப்புக்களும் மற்றும் வகைகூறலும். (Responsibility and Accountability)

வாண்மைத்துவம் என்பதனால் கருதப்படுவது, ஒருவர் குறித்த விசேடமான செயற்பாடொன்றைப் புரிவதற்கு அவசியமான கல்விசார் தகுதிகளையும், திறன்களையும் கொண்டிருத்தல் வாண்மைத்தவம் எனக்கருதப்படும்.

ஒரு முழுமையான தொழில்வாண்மைக்குரிய இயல்புகளாக

  1. பொதுச்சேவை புரிவதற்கான உணர்திறனும் வாழ்நாள் முழுவதும் அதற்கான தியாகமும் இருத்தல்.
  2. சாதாரண குடிமகனை விட குறிப்பிட்ட தொழிலுக்கான அறிவும் திறனும் இருத்தல்.
  3. கொள்கைகளை சிறப்பாக பிரயோகிக்கக் கூடிய ஆற்றல்.
  4. தொழிலுக்கான அதிக கால் விசேட பயிற்சி.
  5. தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதிப்பத்திரம் பெறல்.
  6. வேலைசார்பான முடிவுகளை எடுப்பதில் சுதந்திரம் காணப்படும்.
  7. குறித்த நிபுனத்துவத்திற்கான கேள்வி தொடர்ந்து காணப்படும்.
  8. தனிப்பட்டவர்களின் சாதனை மதிக்கப்படல்.


வகை கூறல் என்றால்?

யாராவது ஒருவர் தமக்கு சாட்டப்பட்டுள்ள விடயமொன்றின் பெறுபேறு தொடர்பாக தனக்கு மேலே உள்ளவர்களைப் போன்றே தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கும் காரணம் கூறக் கடமைப்பட்டிருப்பது வகைகூறல் எனக்கருதப்படும்.

தொழில் வகைகூறல் என்ற எண்ணக்கரு ஏனைய வகைகூறல் எண்ணக்கருத்தாவான ஒப்பந்தம்சார் வகைகூறல், நல்லொழுக்க வகைகூறல், நிதிசார் வகைகூறல், மற்றும் அரசியல்சார் வகைகூறல் போன்ற சகல வற்றையும் பின் தள்ளிச் செல்கின்றன.


கூட்டுப் பொறுப்பு என்றால்?

  • கற்றல் சமூகம் ஒன்றின் அங்கத்தவராக பொது நோக்குடன் (Shared vision) அந்த நோக்கு மற்றும் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்குச் சகலரும் சமமாக ஒன்றினைந்து கருமமாற்றுவதை கூட்டுப்பொறுப்பு (Collaborations) எனலாம்.
  • வெற்றிகரமான ஆசிரியர் கூட்டுப்பொறுப்பொன்றின் போது பின்வரும் விடயங்களை காணமுடியும்.
    1. கூட்டுப் பொறுப்பு சுயமாக ஏற்படக்கூடிய தொன்று.
    2. ஆங்கு சகலரும் சமமாகக் கருதப்படுதல் வேண்டும்.
    3. கூட்டுப் பொறுப்பு அங்கத்தவர்களின் அன்னியோன்ய நொக்கங்கள் மீது அமையப்பெற்றுள்ளது.


கூட்டுப்பொறுப்பினால் ஏற்படக் கூடிய நன்மைகள்

கூட்டுப்பொறுப்பு தீர்மானம் எடுத்தல் மற்றும் செயற்பாட்டுரீதியில் சமூகமளித்தலின் ஒன்றினைந்த பொறுப்பின் மீது நிலைத்துள்ளது.
  1. தம்மிடம் உள்ள வளங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வர்.
  2. கிடைக்கின்ற பெறுபேறுகள் தொடர்பாக சகலரும் தனித்தனியாகப் பொறுப்பேற்பர்.
  3. கூட்டுப்பொறுப்பினூடாக ஒவ்வொருவருடைய அறிவு மற்றும் பெறுமதியை பகிர்ந்து கொள்ளல் இடம்பெறுகின்றது.
  4. ஓன்றாகத் திட்டமிடல் மற்றும் ஒன்றாகக் கற்பித்தல் மேற்கொள்வர். இதன் மூலம் மாணவர் அடைவு அதிகரிக்கும்.
  5. கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் பண்புத்தரம் அதிகரிக்கும்.


ஆசிரியர் கூட்டுப்பொறுப்பை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள்

  1. தரவட்டம்.
  2. ஆசிரியர் குழு கலந்துரையாடல்.
  3. மாணவர் முகாம்.
  4. இணைப்பாடவிதான செயற்பாடுகள்.
  5. பாட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்.


பாடசாலையின் கலைத்திட்டம் சார்பாக ஆசிரியர் கொண்டிருக்க வேண்டிய வினைத்திறன் வாய்ந்த செயற்பாட்டிற்கு அவசியமான புரிந்துணர்வும் திறன்களும்.

  • ஆசிரியரின் ஆளுமை விருத்திக்குரிய பண்புகள்.
  • பாடசாலைக்கலைத்திட்டம் பாடம் சம்பந்தமான போதுமான அறிவு.
  • கற்றல் செயற்பாடுகளும் அதனுடன் தொடர்பான கொள்கைகள் பற்றிய தெளிவு.
  • தொடர்பாடல் நுட்ப முறைகள் பற்றிய அறிவும், தொடர்பாடும் ஆற்றலும்.
  • கற்றலைப் பாதிக்கும் காரணிகள்.
  • வகுப்பறையில் பயன்படுத்தத் தக்க கல்வித் தொழிநுட்பம் சார்பான அறிவும் திறனும்.
  • மீத்திறன் வாய்ந்த, கற்றலில் இடர்படும் மாணவர்களை அடையாளங்கண்டு அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய ஆற்றல்.
  • மாணவர்களின் கற்றலை மதிப்பிடக்கூடிய நுட்ப முறைகள்.
  • தேசிய அபிவிருத்திக்கு உதவக்கூடிய பாடசாலைச் செயற்பாடுகள்.
  • தேசிய ஒருமைப்பாட்டிற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய ஆசிரிய நடவடிக்கைகள்.
  • இணைப்பாடவிதானச் செயற்பாடுகளை ஒழுங்கு படுத்தக்கூடிய திறன்கள்.


ஆசிரியர் வாண்மை அதிகரிப்புக்கு உதவக்கூடிய செயற்பாடுகள்

  • சுய மதிப்பீடு
  • விமர்சனரீதியான சுய மீள் நோக்குச் சிந்தனை
  • மேற்பார்வையாளரால் மதிப்பீடு செய்யப்படுதல்
  • பின்னோக்கு குறிப்பேடு எழுதுதல்.(Reflective Journal Writing)


வினைத்திறனுள்ள ஆசிரியரின் இயல்புகள்.

  • தனது கற்பித்தல் செயற்பாடுகளை பரிசீலனை செய்யவும், மதிப்பீடு செய்யவும் தயாராயிருத்தல்.
  • மாணவர்களின் ஆர்வத்தின் உச்ச நிலையை தொடர்ந்து பேணத்தக்க வகையில் உள்ள சவாலை உள்வாங்குதல்.
  • தனது பாடம் சார்ந்த அறிவையும், திறனையும் அது சார்பான கற்பித்தல் நுட்பங்களையும் அறிவதோடு அவற்றை உருவாக்குதல்.
  • சமூகரீதியான அன்பான, இயற்கையான, பக்கச்சார்பற்ற, கற்பிக்க விருப்பமுள்ள வினைத்திறன் வாய்ந்த ஆசிரியர் என்ற நன்மதிப்பை ஏற்படுத்தல்.
  • தன்னுடன் வேலை செய்யும் ஏனைய அனைவருடனும், மாணவர்களுடனும் சிறந்த தொடர்பை கட்டியெழுப்புதல்.
  • தான் வாழும் சமூகத்திலுள்ள சமூக ரீதியிலும், சமய ரீதியிலும் சிறுபாண்மையாக உள்ளோரின் சுய விருப்புக்களையும் எதிர்பார்க்கைகளையும் காத்தல்.
  • சமூக ரீதியான ஏற்புடைமையை உருவாக்குதல்.


5.0 ஆசிரியர்களின் விழுமியம் மிக்க செயற்பாடுகள் தொடர்பான ஒழுக்க விழுமிய முறைமை

ஒழுக்க விழுமியச் செயற்பாடுகள் தொடர்பான ஆசிரிய விழுமியக் கோவை விரிவான முறையில் அமைவது தம்மால் தமக்கு விதிக்கப்பட்டுள்ள செயற்பாடுதளை நேர்மையாகவும், பொறுப்புடனும் முன்மாதிரியாகவும், சமூகப் பொறுப்புக் கொண்டவராக ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் சிந்தனைகள், பொறுப்புக்கள் மற்றும் பழக்க வழக்கங்களாகும்.
இதன் போது 8 துறைகள் ஊடாக ஒழுக்க விழுமிய முறைகள் கட்டியெழுப்பப் பட்டுள்ளன. அவைகளாவன,
  1. ஆசிரியர் தனிப்பட்ட ரீதியில் - சிறந்த நற்பழக்க வழக்கங்கள், ஒழுக்கங்கள் கொண்ட முன்மாதிரி மிக்க சமூக முன்னோடியாகச் செயற்பட வேண்டும்.
  2. ஆசிரியர் பெற்றோருக்குப் பதிலாக பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ஆசிரியர், மாணவர்களின் இடம்சார் பெற்றோர் என்ற சட்ட ரீதியான சிந்தனையைக் கருத்திற் கொள்ளல்.
  3. ஆசிரியர் அறிவு வழங்குபவர், திறமை மற்றும் சிறந்த மனப்பாங்கு விருத்தியாளராக அறிவினை வழங்குதல், திறமை மற்றும் சிறந்த சிந்தனையை விருத்தி செய்தலை ஆசிரியரின் அடிப்படைப் பொறுப்பாகக் கருதி செயற்படல்.
  4. ஆசிரியர் ஆக்கத்திறன் மிக்கவராகவும் மற்றும் வழிகாட்டுநர் மற்றும் ஆலோசகராகவும்--தமது பொறுப்பின் கீழ்வரும் மாணவர்களுக்காக அதியுயரிய சேவையினை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
  5. ஆசிரியர் மதிப்பீட்டாளராக மதிப்பீடு மற்றும் கணிப்பீடு கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகக் கருதி ஆசிரியர்கள் செயற்பட வேண்டும்.
  6. ஆசிரியர் தொழில் சார் உத்தியோகத்தராக - அறிவு மற்றும் திறமைகளைப் பெற்றுக் கொண்டள்ளமையினால் ஆசிரியர் தொழில் சார் உத்தியோகத்தராகக் கருதப்படுவர்.
  7. ஆசிரியர் முகாமைத்துவத்தின் பொறுப்பாளராக செயற்படல்.
  8. சமூகம் மற்றும் தேசத்தின் முன்னோடியாகச் செயற்படல்.


5.1 ஆசிரியர்கள் தனிப்பட்ட ரீதியில்

சிறந்த நற்பழக்க வழக்கங்கள், ஒழுக்கங்கள் கொண்ட முன்மாதிரி மிக்க சமூக முன்னோடியாகச் செயற்பட வேண்டும்.
  • தாம் சிறந்த தேகாரோக்கிம் கொண்டவராக இருப்பதற்குத் தேவையான ஒழுங்குகள் பற்றி உடற்பயிற்சி மற்றும் சுத்தத்தைப் பேணுதல்.
  • சகல சந்தர்ப்பங்களிலும் ஒழுக்கம் மற்றும் விழுமியத்தைப் பாதுகாக்கக் கூடியவாறு சுத்தமாக எளிமையான முறையில் ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.
  • போதை, புகைத்தல், வெற்றிலை சாப்பிடல் போன்ற பழக்கங்கள் மற்றும் பல்வகையான முறைகேடான செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்திருத்தல், ஏனையோரையும் தவிர்ந்திருக்க உதவுதல்.
  • தனிப்பட்ட மற்றும் சமூகச் செயற்பாடுகள் தொடர்பான அபகீர்த்திக்கு உட்பட்டோருடனான பழக்கங்களிலிருந்து விலகியிருத்தல்.
  • தாம் பழகும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏனையோரின் முன்னிலையில் தமது செல்வநிலை, குடும்பத்தரம், மற்றும் உயர் நிலைகளைக் கொண்டோருடனான பழக்கங்கள் தொடர்பாகப் பெருமையுடன் பேசாதிருத்தல்.
  • தமது செல்வம், குடும்பத்தரம், உயர்பதவிகள் கொண்டோருடனான நட்பு இருப்பதாக காண்பித்து ஏனைய ஆசிரியர்கள், மாணவர்களை அச்சத்திற்கு உற்படுத்த அல்லது அவர்களுக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியவாறான செயற்பாடுகளில் ஈடுபடாதிருத்தல் மற்றும் அவ்வாறு செயற்படும் நபர்களுக்கு முன்னிலையில் கட்டுப்பாடற்ற பழக்கவழக்கங்களைக் கொண்டிருத்தல்.
  • தமது சொந்த வாழ்க்கை மற்றும் சமயம், அரசியல் போன்றவைகள் தொடர்பாகத் தனிப்பட்ட கருத்தினை அங்கீகரிக்க மாணவர்களை வலியுறுத்துவதிலிருந்து விலகியிருத்தல்.
  • ஏதேனும் பாடங்கள், மொழி அல்லது ஏனைய துறைகள் தொடர்பாகத் தமது விஷேட இயலுமைகளை ஏனைய ஆசிரியர்களை இழிவுபடுத்துவதற்காகப் பயன்படுத்தாதிருத்தல்.
  • சிறந்த கொள்கைகள் கொண்டுள்ளோர் முன்னிலையில் தீவிரவாதக் கொள்கையினைக் கடைப்பிடிக்காது இருத்தல் மற்றும் தீவிரவாத நிலைப்பாட்டில் இருந்து சமநிலை கொண்ட நபராகச் செயற்படல்.
  • அநீதிகள், முறையற்ற ரீதியல் இழிவுபடுத்தல் மற்றும் அச்சமூட்டல், போன்றவற்றிலிருந்து தமது சகோதர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், ஏனையோரைப் பாதுகாப்பதற்காகச் சகல சந்தர்ப்பங்களிலும் தயாராக இருத்தல்.
  • வகுப்பறை மற்றும் அதற்கு வெளியே மாணவர்களுடன் பழகும் சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டினைத் தவிர்த்துக்கொள்ளல்.
  • சகல சந்தர்ப்பங்களிலும் சமூக அங்கிகாரங்களைக் கௌரவித்துப் பழக்க வழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியான கௌரவத்துடன் சகல முறைகளிலும் பிள்ளைகள் மற்றும் முழுச் சமூகத்திற்கும் முன்மாதிரியாகச் செயற்படல்.
  • மனிதர்கள் மற்றும் மிருகங்கள் தொடர்பாக அநீதிகள் இழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் தமது கவலையினை வெளிப்படுத்தி இயற்கையாக அல்லது மனிதனால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் காரணமாகப் பாதிக்கப்படுவோரை இரக்கத்துடன் நோக்கி அவர்களுக்கு உதவிகளைப்புரிதல்


5.2 ஆசிரியர் பெற்றோருக்குப் பதிலாக

பாடசாலை மாணவர்கள் தொடரபில் ஆசிரியர், மாணவர்களின் இடம்சார் பெற்றோர் Logo Parents என்ற சட்ட ரீதியான சிந்தனையைக் கருத்தில் கொள்ளல்.
  • சகல சந்தர்ப்பங்களிலும் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையினைப் பாதுகாத்தல் மற்றும் பெற்றோர் பாதுகாவலர்கள் தொடர்பில் பிள்ளையின் நம்பகத் தன்மையினை உறுதி செய்யக் கூடியவாறு செயற்படல்.
  • குலம், நம்பிக்கை. ஆண் - பெண், பால், சமூக நிலைமைகள், சமயம், மொழி, பிறப்பிடம், ஆகிய காரணிகளைக் கருத்திற் கொள்ளாது சகல மாணவர்களுக்கும் நியாயமாகவும், பக்கச் சார்பற்ற அன்பினையும், கருணை, பாதுகாப்பினையும் வழங்குதல்.
  • தமது மாணவர்களைத் தமது பிள்ளைகள் போன்று அழைத்தல்.
  • மாணவர்களுக்கு இருக்கக் கூடிய விஷேட தேவைகள், பிரச்சினைகள், தொடர்பில் விழிப்புடன் இருத்தல் மற்றும் அவ்வாறான மாணவர்களுக்குத் தேவையான வசதிகளையும், நிபணத்துவ ஆலோசனைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.


5.3 ஆசிரியர் அறிவு வழங்குபவர், திறமை மற்றும் சிறந்த மனப்பாங்கு விருத்தியாளராக,

அறிவினை வழங்குதல், திறமை மற்றும் சிறந்த சிந்தனையை விருத்தி செய்தலை ஆசிரியரின் அடிப்படைப் பொறுப்பாகக் கருதி ஆசிரியர் கீழ்க் குறிப்பிட்ட வாறு செயற்படல் வேண்டும்.
  • ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைப்பிரகடனம் (1989) இற்கமைய சிறுவர்களிடம் இருக்க வேண்டிய உரிமைகளை (விஷேடமாக் கல்வி உட்பட) உறுதிப்படுத்தக்கூடியவாறான செயற்பாடுகள்.
  • சகல சந்தர்ப்பங்களிலும் சிறந்த தயாரிப்புக்களுடனும் கூடியதாகப் பொறுப்புக்களை நிறைவேற்றல்.
  • வழங்கப்படும் அறிவு சரியானது என்றும் பொருத்தமானது என்றும் மாணவர்களுக்கு உரியது என்றும் உறுதிப்படுத்தல்.
  • விஷேடமான கற்பித்தல் தொடர்பில் புனிதமான பிரவேசங்களைப் பின்பற்றல்.
  • கற்பித்தல் காலத்துக்குள் கேள்விகளைக் கேட்டல் மற்றும் கலந்துரைடி ஆர்வமூட்டி மாணவர்களின் விழுமியச் சிந்தனைகளை ஊக்குவிக்க சந்தர்ப்பம் வழங்குதல்.
  • பாடத்துக்குரிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளத் தேவையான மாணவர்களுக்கு அதற்கான தகவல்களை பெற்றுக்கொள்ளும் முறைகளைத் தெளிவு படுத்தல் மற்றும் தம்மாலான மேலதிக தகவல்களை வினவுவதற்குச் சந்தர்ப்பம் வழங்குதல்
  • மாணவர்களைச் சுய கற்கைக்கு ஆர்வமூட்டத் தேவையான வசதிகளை வழங்குதல்.
  • மாணவர்களின் சிந்தனை விருத்தியாளர்களாக மற்றும் அதற்காக ஆர்வமூட்டுபவராகச் செயற்படல்.
  • எச்சந்தர்ப்பத்திலும் தமது மாணவர்களிடம் நிதியினை அறவிட்டுக் கற்பிப்பதைத் தவிர்த்தல்.


5.4 ஆசிரியர் ஆக்கத்திறன் மிக்கவராகவும் மற்றும் வழிகாட்டுநர் மற்றும் ஆலோசகராகவும்.

ஆக்கத்திறன் மிக்கவராகவும் மற்றும் வழிகாட்டுநர், ஆலோசகராகவும் தமது பொறுப்பின் கீழ்வரும் மாணவர்களுக்காக அதியுயரிய சேவையினை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
  • இப்பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் அறிவினால், திறமையினால் மற்றும் சிறந்த சிந்தனைகளைக் கொண்டோராகச் செயற்படல்.
  • மாணவர்களிடம் இருக்க வேண்டிய பின்னடைவுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனத்துடன் இருக்க வேண்டியதுடன் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்தல்.
  • பிள்ளைகள் தொடர்பான பலவீனங்கள் அல்லது பிரச்சிகைள் தொடர்பான இரகசியத் தகவல்வளை அப்பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் சட்டரீதியிலான பாதுகாவலர்களைத் தவிர வேறு எவருக்கும் வெளிப்படுத்தாதிருத்தல்.
  • பெற்றோருடன் நல்லுறவைப் பேணித் தேவையான சந்தர்ப்பங்களில் அவர்களுக்குத் தமது பிள்ளை தொடர்பிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத் தம்மை இலகுவாக அண்மிப்பதற்குச் சந்தர்ப்பத்தினை வழங்குதல்.
  • எச்சந்தர்ப்பத்திலும் ஆசிரியர் மாணவர் தொடர்புகளை முறையற்ற ரீதியில் பயன்படுத்தாது இருத்தல் மற்றும் மாணவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படும் சந்தர்ப்பங்களிலிருந்து தவிர்ப்பதற்காக நடவடிக்கை எடுத்தல்.
  • சகல சந்தர்ப்பங்களிலும் மாணவரின் அறிவு, திறமை மற்றும் சமூக விழுமிய விருத்திக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.


5.5 ஆசிரியர் மதிப்பீட்டாளராக

மதிப்பீடு மற்றும் கணிப்பீடு கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகக் கருதி ஆசிரியர்களினால்
  • தொடர்ந்தும் அதற்காகத் தேவையான அறிவினை இற்றைப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த அறிவு, சிந்தனை, ஆற்றல் விருத்தியினை ஏற்படுத்தல்.
  • மாணவர்களிடம் இருக்க வேண்டிய கற்றல் பின்னடைவுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புடன் இருந்து அவற்றுக்குத் தீரவுகளைக்காண்பதற்குத் தேவையான நிபுணத்துவ ஆலோசனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • மாணவர்கள் தொடர்பில் எதுவித பேதங்களும் இன்றித் தனிப்பட்ட அழுத்தங்கள் இன்றி நெகிழ்வுத்தன்மையுடன் கட.டியெழுப்பக் கூடியவாறான மதிப்பீட்டுச் செயற்பாடுகளைச் செய்தல்.


5.6 ஆசிரியர் தொழில் சார் உத்தியோகத்தராக

  • அறிவு மற்றும் திறமைகளைப் பெற்றுக் கொண்டுள்ளமையினால் ஆசிரியர் தொழில் சார் (வாண்மையாளராக) உத்தியோகத்தராகக் கருதப்படுவர்.
  • தமது தெழில்சார் அறிவு மற்றும் திறமைகளில் செல்லுபடியாகும் தரத்தினைப் பேணுவதனைப் போன்று கட்டாயமாக சமகாலப்படுத்தவும் வேண்டும்.
  • கற்பித்தலைத் தொழிலாகக் கருதுவதன் மூலம் ஆசிரியரிடம் சமூகத்திற்குத் தேவையான அறிவு, திறன், மனப்பாங்குகளைக் கொண்டிருத்தல்.


6.0 சட்ட ஒழுங்கு விதிமுறைகள்

இவ் ஒழுக்க விழுமியங்கள் முறைமை சகலரினாலும் பின்பற்றப்பட வேண்டியதுடன் தேவையான ஆலோசனைகளைத் தவறவிடுவோருக்கு எதிராக ஒழுக்காற்றுச் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடியவாறு சட்ட முறைமையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இச்சட்ட முறைமையில் கட்டளைகள் தொடர்பான செயற்பாடுகளின் போது அதற்கு வழங்கப்பட்டுள்ள இலக்கத்தினைக் குறிப்பிடல் வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்களினால் பின்பற்ற வேண்டிய விழுமிய முறைமையுள் நேர்மையுடன், பொறுப்புடன், தொழில்சார் தரத்துடன் முன்மாதிரியாகச் சமூகப் பொறுப்பு கொண்டோராக ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்க்கும் சிந்தனைகள், அங்கீகாரங்கள், பழக்கவழக்கங்கள் உள்ளடங்கியுள்ளன. இலகுவான செயற்பாடுகளுக்காக பல்வேறுபட்ட தொனிப்பொருளின் கீழ் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஒரு தொனிப்பொருளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல.


6.1 ஆசிரியர் தனிநபர் என்ற அடிப்படையில்

சிறந்த பழக்க வழக்கங்கள், ஒழுக்கங்கள் மற்றும் விழுமியங்கள் கொண்டவராக ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்க்கும் சமூக அபிலாசைகளுக்கு அமைய அவர் கீழ்க்குறிப்பிடப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
  • மது விற்பனை நிலையங்கள், சூதாட்டங்கள் இடம்பெறும் அபகீர்த்திக்கு உட்பட்ட இடங்களில் நடமாடக் கூடாது.
  • சூதாட்டம், போதை, புகைத்தல் ஆகிய பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டவராக அபகீர்த்திக்கு உட்பட்ட வகையில் செயற்படக் கூடாது.
  • சகல சந்தர்ப்பங்களிளும் நேர்மையான செயற்பாடுகள் மற்றும் உண்மையைக் கூறவும் கட்டுப்படுதல் வேண்டும்.
  • வட்டிக்கு நிதி வழங்குதல், உடற் சுகாதாரத்திற்கு மற்றும் சமூகநலனுக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளில் ஈடுபடாதிருத்தல்.
  • மோதல்களைத் தவிர்த்தல், மனித உரிமை, சறுவர் மற்றும் மகளிர் உரிமைகள் தொடர்பிலான மூலம்சங்களைப் பின்பற்ற வேண்டியதுடன் சிறுவர்களை வேலைக்கமர்த்தல், அவர்களைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தல் போன்ற முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்பதுடன் அவ்வாறான செயற்பாடுகளுக்குத் துணை போகவும் கூடாது.


6.2 ஆசிரியர் பெற்றோருக்குப் பதிலாக"

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பெற்றோரின் இடத்தில் ஆசிரியரும் கருதப்படுவதனால் ஆசிரியர் சகல சந்தர்ப்பங்களிலும்,

மாணவர் ஒருவர் அல்லது ஒரு குழுவினருக்கு விஷேட நபராக இருக்கக் கூடாது என்பதுடன் எதுவித பேதங்களும் இன்றி சமநியாயத்துடன் சகல பிள்ளைகளையும் கருத வேண்டியதுடன் மேலதிகமாகக் கவனம் செலுத்த வேண்டியோருக்காக விஷேட கவனம் செலுத்த வேண்டும்.


6.3 ஆசிரியர் அறிவினை வழங்குபவராகத் திறமை மற்றும் சிந்தனை ஆற்றல் கொண்டவராக.

அறிவினை ஊட்டுதல், சிந்தனை மற்றும் திறமை விருத்தியினை தமது அடிப்படைப் பொறுப்புக்களாகக் கருதி கீழ் குறிப்பிடுபவற்றைக் கவனத்துடன் மேற்கொள்ள ஆசிரியர்கள் நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.
  • தமது பொறுப்புக்களை நிறைவேற்றச் சிறந்த முறையில் தயாராக இருத்தல்.
  • வழங்கப்படும் அறிவு, திறமை, மனப்பாங்கு சரியானது என்றும் உரியதானது என்றும் பயன்படுத்தும் முறைகள், மாணவ மாணவிகளின் தன்மைக்கு அமையப் பொருத்தமானது என்றும் உறுதிப்படுத்தல்.
  • பாடசாலையினைப் போன்று பாடசாலைக்கு வெளியேயும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்களின் பாதுகாப்புத் தொடர்பான முழுமையாக உறுதிப்படுத்தல்.
  • மேலதிக தகவல்கள் மற்றும் மேலதிக தகவல்களை வழங்கும் முறைகளை இனங்காண்பதற்கு எதிர்பார்க்கும் மாணவ மாணவிகள் தம்மிடம் அச்சமின்றி வருவதற்குத் தேவையான சந்தர்ப்பத்தினை வழங்குதல்.
  • நேரடியாக அல்லது மறைமுகமாக தமது பாடங்களுக்கு அல்லது பாடத்தில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள், மாணவர் ஒழுக்கம் மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளைத் தவிர ஏனைய பயனற்ற விடயங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுவதில் இருந்து தவிர்ந்திருத்தல்.


6.4 ஆசிரியர் ஆக்கத்திறன் மிக்க வழிகாட்டுநர் மற்றும் ஆலோசகராக இருத்தல்.

தமது பொறுப்பிலுள்ள மாணவர்களின் வழிகாட்டுநர் மற்றும் ஆலோசகராக அதியுயரிய பணிகளை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என்பதனைக் கருத்திற்கொண்டு
  • தமது மாணவரின் ஆத்ம அபிமானத்துக்கும் மற்றும் ஆத்ம கௌரவத்திற்கும் பாதிப்புக்கள் ஏற்படுத்தக்கூடிய அவர்களிடையே ஏற்படும் எதிர்மறையான சிந்தனைகள் மற்றும் வெளிப்பாடுகளை வெளியிடச் சந்தர்ப்பங்கள் வழங்காதிருத்தல் வேண்டும்.


6.5 ஆசிரியர் மதிப்பீட்டாளராக

மதிப்பீடுகளை மேற்கொள்ளல் மற்றும் மேற்பார்வையைக் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாகக் கருத்திற் கொள்ளல்.
  • தம்மால் மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகள் மற்றும் மேற்பார்வையாளர்களை நியாயமாகவும், பக்கச் சார்பின்றியும் உண்மையாகவும் உறுதிப்படுத்தல் வேண்டும்.


6.6 ஆசிரியர் வாண்மை மிக்கவராக

தமக்கு உத்தரவிடப்படும் மற்றும் தம்மால் பின்பற்றப்படும் உயரிய பண்புகளுக்கு அமைய ஆசிரியத் தொழிலின் கௌரவம் தங்கியிருப்பதனைக் கருத்திற்கொண்டு
  • பதவியுயர்வின் போது தமக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படும் வேளையிலும் கூடத் தமது உரிமையினை மாத்திரம் சமர்ப்பித்து தமது தொழிழுக்குப் பொருத்தமற்ற விடயங்களில் ஈடுபடாது இருத்தல் வேண்டும்.
  • ஆசரியத் தெழிலின் கௌரவம் தங்கியிருப்பது சகல ஆரிசியர்களினாலும் தொழில் விழுமியங்களைப் பின்பற்றுவதனைக் கருத்திற் கொண்டு, தமது தொழில்சார் அபிமானத்திற்குப் பங்கம் ஏற்படாதவாறு செயற்படுவதன் மூலமாகும்.


6.7 ஆசிரியர் முகாமைத்துவத்தின் பொறுப்பாளராக

  • தமது தொழிலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத சட்டங்கள், உயரிய முகாமைத்துவத்தில் தமக்குள்ள பொறுப்ர்க்கள் தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்குதல்.
  • பாடசாலை டிமற்றும் அதனுடன் தொடர்புபட்ட கொள்கைகளை வகுத்தல் மற்றும் அமுல்படுத்த உதவுதல்
  • முகாமைத்துவ ஆலொசனைகளைப் பின்பற்றுதல் மற்றும் பிரச்சினைகுளுக்குரிய சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் அமைதியான செயற்பாடுகளை மேற்கொள்ளல்
  • தமத தொழில் சார்செயற்பாடுகள் மற்றும் அவற்றின் பெறுபேறுகள் தொடரபாகப் பரஸ்பர கொளரவத்தினை ஏற்படுத்தல்
  • சுகல கடமைகளையும் உரிய பொறுப்புடன் உரிய செயற்பாடுகள் ஊடாக நியாயமாக மேற்கொள்ளல்.
    1. நிர்வாக ஒழுங்கு விதிகள், உரிய முகாமைத்துவம் தொடர்பில் தமக்குள்ள பொறுப்புக்கள் குறித்துச் சிறந்த அறிவினைப் பெற்று அம்முகாமைத்துவ ஆலொசனைகளைப் பின்பற்றுதல் மற்றும் பிரச்சினைகளுக்குரிய சந்தர்ப்பங்களில் அவை தொடர்பில் விரிவான அடிப்படையில் அமைதியாக வினவுதல்.
    2. தமது தொழில் சார் கௌரவத்தினப் பாதுகாக்கக் கூடியவாறு தமது நிறுவனத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.


6.8 சமூகம் மற்றும் தேசத்தின் முன்னோடியாக

ஆரிரியர் சமூகம் மற்றும் தேசத்தின் முன்னோடியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை நிறைவேற்றுவதாக்கருதி
  • தமது பாடசாலைக்கு, சமூகத்துக்கு, நாட்டுக்கு, தேசத்தின் மீது பற்றுள்ளவராக இருக்க வேண்டியதுடன் அவ்வாறான மாணவர் பரம்பரையினரையும் கட்டியெழுப்பப் பங்களிப்புச் செய்தல்.
  • தேசிய நல்லினக்கத்தினை ஏற்படுத்தக் கூடியவாறு மாணவர்களிடையே சிறந்த சிந்தனைகள், விழுமியங்களை விருத்தி செய்தல்.
  • இ)சமூகப்பிரச்சினைகளை இனங்கண்டு அப்பிரச்சினைகள் ஊடாக உருவாக்கப்பட்ட சவால்களை எதிரகொள்ளக்கூடியவாரான செயற்பாடுகளில் ஈடுபடுத்தல்.

கல்வியமைச்சின் சுற்றறிக்கை 2012/37 ம் இலக்கம் இது தொடர்பாக விளக்குகிறது. இந்த சுற்றறிக்கையை கீழே பதிவிறக்கம் செய்து முழுமையான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
                                                                                                « Previous                     Next »

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.