06. சம்பள ஏற்றம்
- சம்பள ஏற்றம் பெறுவதற்கான உரிமை
- சம்பள ஏற்றத்தை தவிர்ப்பதற்கான முறைகள்
- தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்
- நிறுத்துதல்
- குறைத்தல்
- இல்லாக்குதல்.
தாபனக் கோவையின் ஏழாவது (07வது) அத்தியாயம் சம்பளம் ஏற்றம் பற்றி விரிவாக விவரிக்கின்றது. நிரந்தர நியமனம் பெற்ற ஒவ்வொரு அரசு ஊழியரும் இந்த சம்பள ஏற்றத்திற்கு உழைத்து கொள்வது அவசியமாகின்றது. சம்பள ஏற்றம் என்பது அரசு ஊழியர்கள் உழைத்து பெற்றுக்கொள்ள வேண்டியது. இவ்வாறான ஒரு பின்புலம் காரணமாக அரசு ஊழியர்கள் தனது சம்பள ஏற்றங்களை உரிமை பாராட்டி கோர முடியாது என்று கூறுகிறது. அதாவது தனக்கு ஒப்படைக்கப்படுகின்றன கடமைகள், பொறுப்புகள் வினைத்திறனான முறையில் நிறைவேற்றுகின்ற பொழுதே நிறுவனத்தின் அபிவிருத்திக்கு பங்காளியாக இருக்கின்ற சகல அரச ஊழியர்களும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அல்லது குறிப்பிட்ட ஒரு காலத்துக்குரிய சம்பள ஏற்றங்களை பெற்றுக்கொள்ளமுடியும். இதற்கு மாற்றாக செயற்படுகன்ற அரச ஊழியர்கள் உண்மையில் சம்பளத்திற்கு உரிமை பாராட்டி உரிமை கேட்க முடியாது. அரசு ஊழியர்கள் தான் வேலைசெய்கின்ற நிறுவனத்தலைவர் சான்று படுத்துகின்ற போது, அதாவது குறிப்பிட்ட காலத்தில் சகல பொருட்களும், கடமைகளும் இந்த ஊழியரின் ஆல் வினைத்திறனான முறையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பதை சான்று படுத்துகின்ற போது நிச்சயமாக இந்த சம்பள ஏற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். நீங்கள் இந்த சம்பவள ஏற்றங்களை தவர விடுகின்ற போது நிச்சயமாக உங்களுடைய சேவை காலத்தில் நிச்சயமாக அது பாதிக்கும்.
அரசு ஊழியர்கள் தங்களுக்கு உரிய சம்பளம் ஏற்ற திகதியை நிச்சயமாக அறிந்திருப்பது அவசியம் ஆகின்றது. காரணம் அந்தத் திகதியில் அல்லது அதில் தொடர்புடைய ஆவணங்களை நிறுவனத்தில் சமர்ப்பித்து உங்களுடைய சம்பள ஏற்றங்களை பெற்றுக் கொள்வது அவசியமாகின்றது. ஒரு ஊழியர் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கன்ற போது மற்றும் குறிப்பிட்ட காலத்திற்காக சம்பள ஏற்றம் பெறுகின்ற போது அது தொடர்ச்சியாக அவருடைய சேவை காலம் முழுவதுமே பெற்று கொண்டிருப்பார். அவரது சம்பள ஏற்றம் அவரது அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்பட்டு சம்பள ஏற்றம் வழங்கப்படும்.
உதாரணமாக : அடிப்படை சம்பளம் + ஒரு வருடத்திற்கு உரிய சம்பள ஏற்றம்
ஒரு அரச ஊழியர் தொடர்ச்சியாக சம்பள ஏற்றங்களை பெறுவது கட்டாயம் ஆகும். தாங்கள் வகிக்கின்ற பதவியை வேறு ஒரு பதவிக்கு பதவி உயர்வு பெறுவதற்கும், போட்டிப் பரீட்சைக்கு பங்குபற்றுவதற்கும் அல்லது நேர்முகப் பரீட்சைக்கும் இதுவும் ஒரு தகமையாக பரிசீலிக்கப்படும். எங்களுடைய தனிப்பட்ட சுயவிபரக்கோவையில் இது சம்பந்தமான விடயங்கள் ஆராயப்பட்டு உங்களுக்காக பதவி உயர்வுகள் வழங்கப்படும். உங்களது தாமதமாகும் சம்பள ஏற்றங்களால் உங்களது பதவி ஏற்றங்கள் காலதாமதம் அடையலாம் அல்லது உங்களுடைய பதவி உயர்வு இரத்துச் செய்யப்படும் சாத்தியங்கள் உண்டு. எனவே குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வருடா வருடம் நாங்கள் உழைக்கின்ற எங்களது படி (சம்பள) ஏற்றங்களை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
2018.06.14ம் திகதி 02/2016ம் இலக்க சுற்றுநிருபத்தின் சம்பளத்திருத்தம் அடங்கிய சுற்றுநிருபம் கீழே பதிவிறக்கம் செய்ய முடியும்.
2014.01.21 திகதி வெளியிடப்பட்ட அரச நிருவாக சுற்றுநிருபம் 01/2014 மற்றும் அதற்கு காலத்திற்கு காலம் செய்யப்பட்ட திட்டங்களுக்கு அமைவாக நீங்கள் சேவைக்கு உட்பட்ட அதன் பின்பு பதவிக்கு விதிக்கப்பட்டுள்ள இரண்டாம் மொழி தேர்ச்சி பதவிக்குரிய தரம் பெற்றுக்கொள்ளவேண்டும் உரிய காலத்தில் தேர்ச்சி பெறாத விடத்து தகைமை பெறும் வரையில் உங்களது சம்பள உயர்வு நிறுத்தப்படும்.
07. விடுமுறை
இதுபற்றிய முழுமையான விபரங்கள் அடங்கிய (ஆவணங்கள் அடங்கிய) Mr. S.M.S. Hameed ஆசிரியர் அவர்களின் ஆக்கங்கள் எமது www.edumorenews.com இல் வெளிவந்து இருக்கிறது.
08. வேறு உரிமைகள் மற்றும் வரையறைகள்
அரசு ஊழியர் ஒருவர் பின்வரும் உரிமைகளை பெறுவதற்கு தகுதி உடையவர்.
- விடுமுறை புகையிரத சீட்டு மற்றும் சீசன் டிக்கெட்.
- சம்பளக் கடன், சம்பளம் முற்பணம் மற்றும் சொத்துக் கடன்.
- அரசியல் உரிமைகள்.
- தொழிற்சங்க உரிமைகள்.
- கடமையை நிறைவேற்றியதன் காரணமாக ஏற்படும் வழக்குகள் தொடர்பான விதிமுறைகள்.
- விதவைகள் / தபுதாரர்கள் அநாதைகள் நிதியத்தில் அங்கத்துவம் பெறுவதன் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள்.
- ஜுரி சபைகளில் பணியாற்றல்.
- அரசு ஊழியர்கள் தொடர்பில் அரசிடம் காணப்படுகின்ற அதிகாரங்கள் மற்றும் வேறு வேலைகள் செய்வது தொடர்பான விதிமுறைகள்.
09. சேவை முடிவுறும்.
சேவை முடிவுகள் சந்தர்ப்பங்கள் பின்வருமாறு காணப்படும்.
- தானாக சேவையில் இருந்து விலகிக் கொள்ளல்.
- சேவையை விட்டு செல்லல்.
- ஓய்வு பெறச் செய்தல். (ஓய்வு பெறல்)
- சேவையில் இருந்து நீக்குதல்
- வேறு பதவிகளுக்கு விடுவித்தல்.
10. இடமாற்றம்.
- தேசிய பாடசாலைகளுக்கு இடையிலான இடமாற்றம்.
- மாகாணசபை ஆசிரியர்களின் இடமாற்றம்.
- மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளுக்கு இடையே இடமாற்றம் செய்தல்.
தேசிய இடமாற்ற கொள்கைக்கு அமைய 2017.12.13 ம் திகதி ED/1/27/1/5/1/2007 என்ற தொடர் இலக்கமிடப்பட்ட சுற்றறிக்கை இலக்கம் 2007/20 இல் இடமாற்றம் பற்றி தெளிவாக விவரிக்கிறது.
11. ஒழுக்காற்று கட்டுப்பாடுகள்.
கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் ஆசிரியரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கௌரமான நடத்தைகள் மாணவர்களை சிறப்பாக வழி நடத்துவதற்கு உறுதுணையாக அமையும்.
அரசு ஊழியர்களால் மேற்கொள்ள முடியுமான பிழைகள்
- மதுசாரம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துதல் தொடர்பான குற்றங்கள்.
- சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுகள்.
- பெற்றோர்களை முறைகேடாக நடத்துதல் தொடர்பான குற்றச்சாட்டுகள்.
மேற் போன்ற நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்காக வழங்க முடியுமான தண்டனைகள் தொடர்பாக ஆரம்பகட்ட பரிசோதனைகள் நடாத்துதல், குற்றப் பத்திரிகை ஒன்றை வழங்குதல். ஒழுக்காற்று விசாரணை விதிமுறைகளுக்கு அமைய மேற்கொள்ளல்.
இவைகள் பற்றிய பின்வரும் சுற்றறிக்கைகள் கீழே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
12. அவசியமான நிதிப்பிரமான அறிவு
- நிதிப் பிரமாணததை ஒழுக வேண்டியதன் முக்கியத்துவம்.
- பணம் செலுத்துதல் தொடர்பான ஒழுங்கு விதிமுறைகள் - அதிகாரம் வழங்குதல், அங்கீகரித்தல், சான்று உறுதிப்படுத்தல் மற்றும் கொடுப்பனவு செய்தல் என்பன வெவ்வேறாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது.
- வவுச்சர் தயாரித்தல்.
- காலதாமதமின்றி கொடுப்பனவு செய்தல்.
- வசதி கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம் சேகரித்தல், பற்றுச்சீட்டு புத்தகங்கள் மற்றும் பணம் வைப்பிலிடல்.
- அரசின் நிதி தவிர்ந்த வேறு மூலங்களிலிருந்து கிடைக்கின்ற நிதி தொடர்பிலான நிதி சார்ந்த பொறுப்புகள்.
மேலதிக வாசிப்பு
மொடியூல் 02 பற்றிய விளக்கங்கள்.....
தொடரும்.....📝🖊️