ஆசிரியர்களுக்கான லீவுகள் தொடர்ச்சி....
07. பிரசவ விடுமுறை (Maternity Leave)
பெண் உத்தியோகத்தர் ஒருவர் உயிருள்ள குழந்தையைப் பெற்றெடுத்த தன் பேரில் அவருக்கு பிரசவ விடுமுறை அனுமதிக்கப்படும். நிரந்தர, தற்காலிக, சமயோசித, பயிலுநர் உத்தியோகத்தர்களுக்கும் இச்சலுகை விடுமுறையை பெற முடியும். பிரசவ விடுமுறை குழந்தையைப் பிரசவித்த தினத்தில் இருந்தே அனுமதிக்கப்படும். குழந்தை பிரசவத்திற்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு ஆசிரியை அன்று தொடக்கம் குழந்தையை பிரசவிக்கும் வரையான காலத்தில் தனது சொந்த விடுமுறையில் (அமைய லீவு, சுகவீன லீவு) பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரசாங்க தீர்வாகர் சுற்றறிக்கை இல. 4/2005 இல் பிரசவ விடுமுறை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை இல. 4/2005 இன் படி :-
- திரந்தர தற்காலிக அமய அல்லது பயிலுநர் பெண் அலுவலர்கள் இப் பிரிவின் கீழ் பிரசவ விடுமுறை பெறுவதற்கு உரித்துடையவர்கள் ஆவர்.
சம்பளத்துடனான பிரசவ விடுமுறைகள்.
டெண் ஆலுவலரொருவருக்கு உயிரவாழும் ஒவ்வொரு பிள்ளை பிறப்புக்குமாக முழுச்சம்பளத்துடனான அரசாங்க வேளையாற்று 84 நாள்கள் விடுமுறை பெறுவதற்கு உரித்துண்டு. பிரசவம் நிகழ்த்து 04 வாரங்கள் செல்லமுன் அலுவலர் மீண்டும் கடமையை பொறுப்பேற்க அனுமதிக்கப்படமாட்டார். இப்பிரிவின் கீழ் விடுமுறை பெறுவதற்காக ஒரு வைத்தியச் சான்றிதழையோ அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழையோ சமர்ப்பிக்க வேண்டும்.
பிராவ விடுமுறைகளை கணிப்பீடு செய்யும் போது அந்த விடுமுறைக் காலத்திற்குள் வருகின்ற அரசாங்க விடுமுறைகள் மற்றும் சனிக்கிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தினங்களை அதில் உள்ளடக்கலாகாது.
இவ் விடுமுறைக் காலத்தை அலுவலரின் மீதி விடுமுறைகளிலிருந்து கழித்தல் ஆகாது என்பதுடன் இவ் விடுமுறைக் காலத்தை முழுச்சம்பளத்துடனான ஒரு விசேட விடுமுறையாக கருத வேண்டும்.
பிறக்கும் போதே மரணம் நிகழ்கின்ற ஒரு பிள்ளை பிறப்பிலும் பிரசவத்திலிருந்து 6 வாரங்கள் செல்லமுன் குழந்தை மரணிகின்ற சந்தர்ப்பத்திலும், குழந்தையின் மரணச் சான்றிதழை அல்லது வைத்தியச் சான்றிதழை சமர்ப்பித்த போது விசேட சம்பனத்துடனான விடுமுறையாக பிள்ளைப் பிறப்பு நிகழ்த்த திகதி முதல் 6 வார கால விடுமுறை வழங்க வேண்டும்.
அரைச் சம்பளத்துடனான பிரசவ விடுமுறை
மேற் குறிப்பிட்ட முழு சம்பளத்துடனான விடுமுறை பெற்றுக் கொண்ட பின் குழந்தையை பாதுகாத்துக் கொள்வதற்காக அரைச் சும்பனத்துடனான 84 நாள்கள் விடுமுறை பெற உரித்துண்டு.அரைச் சம்பளத்துடனான விடுமுறைக் காலத்திற்குள் வருகின்ற அரசாங்க விடுமுறைகள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினங்களை அரைச் சம்பம்பள விடுமுறைகளாகக் கருத / கணக்கிடப்பட்டல் வேண்டும்.
சம்பளமற்ற பிரசவ விடுமுறைகள்
மேற்குறிப்பிட்ட அரைச் சம்பளத்துடனான பிரசவ விடுமுறைகள் முடிந்த பின் மேலும் குழந்தையின் பாதுகாப்புக்கு அவசியம் ஏற்படும்போது மட்டும் சம்பளமற்ற 84 நாள் விடுமுறை வழங்கலாம்.இப் பிரியின் கீழ் வழங்கப்பப்படுகின்ற விடுமுறைகளை கணிப்பீடு செய்யும் போது அந்த விடுமுறைக் காலத்திற்குள் வரும் அரசாங்க விடுமுறைகள் மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தினங்களை அதில் உள்ளடக்க வேண்டும்.
இந்த விடுமுறைகளை வழங்க முன் அலுவலருக்கு கொடுக்கப்பட்டுள்ள கடன்களின் அல்லது கொடுக்கப்பட்டுள்ள முற்பணங்களின் மாத தவணை கட்டனங்களை தொடர்ந்து அறவிடுவதற்காக திருப்திகரமான ஓர் ஒழுங்கைச் செய்வது தினைக்கத் தலைவரின் பொறுப்பாகும்.
மேற்குறிப்பிட்ட அரைச் சம்பம்பள, சம்பளமற்ற விடுமுறைகள் அங்கீரிக்கப்படுவது குழந்தை உயிர் வாழும் போது மட்டுமாகும். விடுமுறை பெற்றுக்கொள்வது குழந்தையை பாதுகாப்பதற்காக என்பதால் ஏதேனும் காரணமாக குழத்தை மரணித்துவிட்டாள் அத்திகதி தொடக்கம் எழு நாட்களுக்கு பின் இவ் விடுமுறைகள் செல்லுடியற்றதாகும்.
மேற்குறிப்பிட்ட அரைச் சம்பம்பள, சம்பளமற்ற விடுமுறைகள் சம்பள் ஏற்றம்களுக்கும் ஓய்வூதிய அறுவல்களுக்கும் தடையாக அமைதல் ஆகாது. சம்பளமற்ற விடுமுறைக் காலத்திற்குள் ஏற்படும் வெற்றிடங்களின் போதும் பதவி உயர்வுகளின் போதும் இத்த விடுமுறைக் காலத்தை கருதலாகாது.
மேற்குறிப்பிட்ட அரைச் சம்பம்பள, சம்பளமற்ற விடுமுறைகளில் ஒரு பகுதியை இர்ந்துச் செய்து சேவைக்குச் சமூகமளிக்க விரும்பினால் திணைக்களத் தலைவருக்கு அறிவித்து அவ்வாறு செய்யலாம்.
குறிப்பு :
- பெண் அரச அலுவலரொருவர் சம்பளத்துடனான பிரசவ விடுமுறைக் காலம் முடிவடைத்த பின் அரைச் சம்பளத்துடனான பிரசவ விடுமுறைகளை பெறாவிட்டால் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதற்காக வழமையாக சேவை நிலையத்தில் இருந்து புறப்படும் தேரத்திற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன் சேவை நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ் அனுமதி வழங்கப்பட வேண்டியது குழந்தையின் வயது 6 ஆறு மாதங்கள் பூர்த்தியாகும் வரை மட்டுமாகும்.
- மேலும் பெண் அரச அலுவலரொருவர் கர்ப்பமுற்றிருக்கும் காலம் 5 மாதங்கள் ஆகும் போது கடமைக்காக அரை மணித்தியாலம் தாமதமாகி சேலை நிலையத்திற்கு வருகை தரமுடியும். வழமையாக சேவை நிலையத்தில் இருந்து புறப்படும் நேரத்திற்கு அரை மணித்தியாலத்திற்கு முன் புறப்படவும் அனுமதி வழங்கப்படுகிறது. இச்சலுகை வழங்கப்படுவது அலுவலர் பிரசவ விடுமுறை பெறும்வரை மட்டுமாகும்.
மேற்குறிப்பிட்ட இரண்டு சலுகைகளும் ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. (கல்வியமைச்சின் 2007.07.20ம் திகதிய ED/2/29/10/20/39 இலக்க கடிதம்)
நன்றி "அன்பு ஜவஹர்ஷா" ஆசிரியர் அவர்கள் - அந்த சுற்றறிக்கையை பதிவிறக்கம் (Download) செய்ய அவர்களது இலட்சினையை (Logo) ஐ அழுத்துக.
தலைப்புக்கு மேலதிக அறிவுக்காக இடமாற்றம் பற்றிய ஒரு குறிப்பு:-
கல்வி அமைச்சின் 20/2007 சுற்றறிக்கையின் பிரகாரம் சுகாதார காரணங்களின் அடிப்படையில் ஆசிரியர் ஒருவரினால் இடமாற்றம் கூறும் போது தமது சுகாதார நிலைமையை உறுதி செய்வதற்காக அரச வைத்திய சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். கர்ப்பிணித் தாய்மார்கள் தொடர்பாக அவரின் விருப்பமின்றி இடமாற்றம் செய்யக்கூடாது. அது எவ்வாறாக இருப்பினும் கர்ப்பிணித் தாய்மார்களினாள் இடமாற்றம் கோரும் போது செயல்பட வேண்டியது வைத்திய அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்படும் விடையங்களை அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளது. மகப்பேற்றின் பின்னர் தாய் ஒருவருக்கு பிள்ளை கிடைத்து ஒரு வருடம் வரை தமது நிரந்தர இடத்திற்கு அருகாமையில் உள்ள பாடசாலைக்கு தற்காலிகமாக சேவையில் இணைத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்க முடியும். இதற்காக ஆசிரிய தாய்மார்களால் கோரிக்கை சமர்ப்பிப்பது அத்தியாவசியமாகும். ஆசிரியரின் சொந்த சுகாதாரத்திற்கு மேலதிகமாக ஆசிரியருடன் இணைந்துள்ள நேரடியாக அழுத்தங்களை கொடுக்கக்கூடிய கீழ்க் குறிப்பிட்ட குடும்பத்தின் அங்கத்தவர்களின் சுகாதார நிலைமை இடமாற்றம் பெறுவதற்காக கருத்திற்கொள்ளப்படும்.
- கணவன்
- பிள்ளைகள்
- பெற்றோர் / கணவனின் பெற்றோர்.
கருச்சிதைவு (Abortion)
கருச்சிதைவு காரணமாக விசேட லீவு ஏதும் அனுமதிப்பதில்லை தனது சொந்த (அமைய / சுகவீன) லீவையே பெற்றுக் கொள்ள வேண்டும்.
குழந்தை பிரசவ காலத்தில் புதிய நியமனம் கிடைக்கப் பெறும் ஆசிரியர்களுக்கான விடுமுறை
பொதுவாக ஒருவருக்கு அரசு நியமனம் கிடைத்த பின்னரே அவருக்கு லீவு சலுகை பெற முடியும் என்ற நடைமுறை வழக்கிலிருந்த போதிலும் பிரசவ சலுகைகள் வழங்கப்படுகின்றன. இக் குழந்தைப் பராமரிப்பின் பொருட்டு மனிதாபிமான சலுகையாகும்.
- தற்காலிக / சமயோசித / பயிலுனர் / உதவியாளர் போன்ற எச்சந்தர்ப்பத்தில் நியமனம் கிடைக்கப் பெற்றாலும் முதல் 84 வேலை நாட்கள் முழு சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறைகள், சலுகைகள் சகலருக்கும் அனுமதிக்கப்படும்.
- குழந்தை பிரசவம் நிகழ்ந்தது 84 வேலை நாட்கள் முடியும் முன் ஒருவருக்கு புதிய ஆசிரியை நியமனம் கிடைக்கும் பட்சத்தில் அவரும் இச்சலுகையை அனுபவிக்க முடியும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர் செய்ய வேண்டியவை.
தமது நியமனக் கடிதம் பிரதியுடன் கடமை பொறுப்பேற்ற பிரதியை இணைத்து மூலப்பிரதிகளில் நியமனம் கிடைத்த குறித்த பாடசாலை அதிபருக்கு அனுப்புதல் வேண்டும். இதன்போது பாடசாலைக்கு நேரில் சென்று பதிவேட்டில் கையொப்பமிட தேவையில்லை.
அத்துடன் தமது குழந்தை பிரசவம் தொடர்பான அத்தாட்சியாக வைத்திய சான்றிதழ் அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது குழந்தைப் பிரசவம் நிகழ்ந்தது தொடர்பான வைத்தியசாலைப் பதிவேட்டுப் பிரதியுடன் பிரசவ லீவு கோரிய கடிதத்தையும் இணைத்து இரு பிரதிகளில் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். (பிரசவம் நிகழ்ந்த திகதி தெளிவாக குறிப்பிட வேண்டும்)
இதனைத்தடர்ந்து பாடசாலை அதிபர் எடுக்க வேண்டிய நநடவடிக்கைகள்
- உரிய ஆசிரியையின் கடமை பொறுப்பேற்ற கடிதம் கிடைத்த தினத்தன்று சம்பவ திரட்டு புத்தகத்தில் (Log Book) அது பற்றிய பதிவை இடுதல் வேண்டும். அத்துடன் உரிய ஆசிரியை பிரிவு கோரி விண்ணப்பித்தது பற்றிய பதிவையும் இடுதல் வேண்டும்.
- பின்வரும் ஆவணங்களை வலயக்கல்வி அலுவலக ஆசிரியர் பகுதிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
- உரிய ஆசிரியையின் நியமனக் கடிதப் பிரதி, பொறுப்பேற்ற கடிதம் (அதிபரின் சிபாரிசுடன்) சம்பவத்திரட்டுப் புத்தகப் பதிவுப்பிரதி அடங்கலாக இரு பிரதிகள்.
- லீவு கோரிக்கைக் கடிதம், அதற்கான அத்தாட்சியுடன் இணைத்து ஒரு பிரதி.
இதனை தொடர்ந்து வலயக் கல்வி அலுவலகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
- அவ்வாசிரியைக்கு நியமனம் பொறுப்பேற்ற திகதி முதல் முழுமையான சம்பளத்தை வழங்குதல்.
- 84 வேலை நாட்களில் குழந்தை பிரசவம் நிகழ்ந்த நாள் முதல் கடமைப் பொறுப்பேற்ற திகதி வரையான நாட்களைக் கழித்து எஞ்சிய வேலை நாட்களுக்கு முழுசம்பளத்துடன் கூடிய விடுமுறை உரிய ஆசிரியருக்கு அனுமதித்தல். (பொ.நி. 3/2013)
குறிப்பு :
பிரசவ லீவு தொடர்பான தலைப்பில் கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைவாகவே அனுமதி வழங்கப்படும்.
உரிய ஆசிரியைக்கான சலுகை
பிரசவ விடுமுறை முடிவுறும் வரை அவ்வாசிரியர் பாடசாலைக்கு சமூகமளிக்காமல் படிவம் D ஐ சமர்ப்பித்து வீட்டிலிருந்து கொண்டே முழு சம்பளத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.
08. தந்தைக்குரிய விடுமுறை (Paternity Leave)
ஆசிரியர் ஒருவர் தமது மனைவியின் குழந்தைப் பிரசவத்தின் பொருட்டு மூன்று (03) நாட்கள் விசேட விடுமுறையைப் பெற முடியும். குழந்தை பிறந்து மூன்று (03) மாதத்தினுல் இந்த விடுமுறையைப் பெற வேண்டும். இதற்காக தமது திருமண சான்றிதழையும், குழந்தைப் பிரசவத்திற்கான வைத்திய அத்தாட்சி பத்திரத்தையும் அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழையும் பின்னர் சமர்ப்பித்து இந்த விஷேட விடுமுறையைப் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். (பொ.நி. 3/2006)
09. கருத்தடை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கான விடுமுறை
மேற்படி சிகிச்சையை மேற்கொண்ட பெண்களுக்கு ஏழு (07) நாட்களும், ஆண்களுக்கு மூன்று (03) நாட்களும் விசேட விடுமுறையைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக வைத்திய அத்தாட்சிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
குறிப்பு : வைத்திய அத்தாட்சிப் பத்திரம் என்பது அரச பதிவுள்ள வைத்தியரிடம் இருந்து பெறப்படல் வேண்டும். அப்பாத்திரத்தில் வைத்தியரின் பெயர், பதிவு இலக்கம், தராதரம்(பதவி), வைத்தியசாலையின் முகவரி என்பன இடம் பெறுவது கட்டாயம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மிகுதி லீவு (சேமித்த லீவு)
ஆசிரியர் ஒருவர் தமது நடப்பு ஆண்டிலும் அதற்கு முந்தைய வருடங்களிலும் அனுபவிக்காமல் மீதமாக உள்ள சுகவீன/பிணி விடுமுறையை தேவையின் போது பின்னர் பயன்படுத்த முடியும். இவ்வாறாக மீதப்படுத்தப்பட்ட விடுமுறையை சம்பாதித்த விடுமுறை / சேமித்த விடுமுறை எனப்படும். இதனுடைய பயன்பாடுகளை பின்வரும் விடுமுறையை வகைகளில் காணலாம்.
10. இத்தா விடுமுறை
முஸ்லிம் பெண் உத்தியோகத்தரின் கணவரின் மரணத்தால் நான்கு (04) மாதம் பத்து (10) நாட்களும், கணவரினால் விவாகரத்து செய்யப்பட்ட மூன்று (03) மாதங்களுக்கு மேற்படாத விசேட விடுமுறையைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடுமுறைக்கான நாட்கள் தனது சேவைக் காலத்தில் உள்ள பயன்படுத்தப்படாத எஞ்சிய (சுகவீன / ஓய்வு) விடுமுறையை கழிக்கப்படுவதுடன் அந்த விடுமுறைகள் போதாத பட்சத்தில் மிகுதி காலம் அரைச் சம்பளத்துடனான விடுமுறையாக அனுமதிக்கப்படும். இதற்காக உரிய கணவரின் மரணச் சான்றிதழ் விவாகச் சான்றிதழ் பின்னர் சமர்ப்பிக்க வேண்டும். (பொ.நி. 11/2007)
11. காலம் கடந்த லீவு
ஆசிரியர் ஒருவர் நடப்பு ஆண்டில் அவருக்கான விடுமுறைகள் அனைத்தும் முடிவுற்றபின் பின்வரும் 07 காரணங்களுக்காக தமது சேவைக் காலத்தில் சேமிக்கப்பட்ட விடுமுறைகள் தொடரான அடுத்தடுத்து வரும் இரண்டு வருடங்களில் சுகவீீன விடுமுறையைப் பயன்படுத்தலாம். இது முழு சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளாகும். இதனை பெறுவதற்கு நடப்பு ஆண்டு மற்றும் தேவைப்படும் அடுத்தடுத்ததாக வரும் இரண்டு வருட விடுமுறை விபரங்களை B-100 படிவத்தில் அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டு உரிய விண்ணப்பங்கள் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பப்படல் வேண்டும்.
காரணங்கள்
- ஆசிரியரின் சுகவீனம்
- தனது குடும்பத்தவரின் சுகவீனம்
- தனது குடும்பத்தவரின் மரணம்
- மேற்குறிப்பிட்டவற்றுள் ஏதேனுமொன்று தொடர்பான சமயச் சடங்கு
- தனது திருமணம்
- தனது வீட்டிலுள்ளோருக்கு ஏற்பட்ட தொற்றுநோய்
- அரச கடமையின் போது ஏற்பட்ட விடயம் அல்லது பிற வழக்கு தொடர்பான கட்டளையின் பேரில் நீதிமன்றுக்கு செல்லல்.
12. விபத்து விடுமுறை
ஆசிரியர் ஒருவருக்கு கடமை நேரத்தின் போது ஏதாவது விபத்தில் காயம் ஏற்பட்டால் அவருக்கு நட்ட ஈடு வழங்கப்படுவதுடன் முழு சம்பளத்துடன் கூடிய விசேட விடுமுறை வழங்கப்படும்.
கடமை நேரம் என்பது ஆசிரியரொருவர் கடமைக்காகத் தமது வீட்டிலிருந்து புறப்பட்ட நேரம் தொடக்கம் தமது கடமை முடிந்து வீடு வந்தடையும் நேரம் வரைக்குமான காலமாகும்.
i. நட்ட ஈடு
விபத்தின் போது மரணம் சம்பவித்தால் தங்கியிருப்பதற்கு பணிக் கொடையாக 60 மாத சம்பளம் வழங்கப்படும். மரணமடைந்தவரின் 55 வயதுக்கு குறைவாக இருப்பின் அவர் உயிரோடு 55 வயதுவரை சேவையாற்றும் வரை பெறவிருந்த மாதச் சம்பளம் (சம்பவள ஏற்றங்களுடன்) தங்கியிருப்பதற்கு வழங்கப்படும். அதன்பின் 55வது வயது பூர்த்தியானவுடன் விதவைகள் அனாதைகள் ஓய்வூதியம் தங்கியிருப்போருக்கு வழங்கப்படும். மரணமடைந்தவர் 55 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பின் 60 வயது வரை அவரது சேவை காலம் கணிக்கப்பட்டு சேவையிலுள்ள சலுகைகள் தங்கியிருப்பதற்கு வழங்கப்படும்.
ii. விஷேட விடுமுறை
விபத்தின் போது காயம் அடைந்தால் மருத்துவச்சபையின் (Medical Board) சிபாரிசின் அடிப்படையில் ஒரு (01) வருடம் முழு சம்பளத்துடன் கூடிய விசேட அறிவைப் பெறலாம். அதன்பின் காலம் கடந்த விடுமுறையைப் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின் மேலும் ஆறு (06) மாத காலம் வரை சம்பளத்துடன் கூடிய விடுமுறையைப் பெறலாம்.
குறிப்பு : மேற்குறிப்பிட்ட சலுகைகளை பெறுவதற்கு இரண்டு (02) அடிப்படைக் காரணங்களை பூர்த்தி செய்வது கட்டாயமாகும். இன்றேல் விபத்தில் சிக்கியவருக்கு எவ்விதமான சலுகையும் கிடைக்க மாட்டாது. அவை
1. விபத்து தொடர்பாக சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் குறிப்பிடப்படல் வேண்டும்.
2. போலீஸ் விசாரணை அறிக்கை பிரதியைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
இவற்றுடன் மருத்துவச் சான்றிதழ்களும் இணைக்கப்பட்டு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு விண்ணப்பத்துடன் அனுப்பப்படல் வேண்டும். (பொ.நி.22/93)
அதன் திருத்தம் சுற்றறிக்கை 22/93 (VI) இன் படி 2017.10.16 ம் திகதி EST-7/COMPT/02/2003-1 இலக்க கடிதத்தின் படி மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதனை கீழே பதிவிறக்கம் (Download) செய்ய முடியும்.
கடமையல்லாத நேரத்தில் ஒரு ஆசிரியருக்கு தன்னால் தவிர்ந்து கொள்ளாத நிலைமையில் ஒரு விபத்து நிகழ்ந்து அதில் அவர் காயப்பட்டால் மாகாண கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடனும் மருத்துவச்சபையின் சிபாரிசூடனும் சம்பளத்துடன் கூடிய விசேட விடுமுறையைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த விடுமுறை ஆசிரியரின் சாதாரண விடுமுறைக்கு புறம்பான சலுகையாகும். (பொ.நி. 382/1987)
13. பயிலுநர் / பயிற்சி பெறுநர் ஒருவருக்கான விடுமுறை
பயிற்சிக் காலத்தில் படியை (Allowance) பெறும் பயிலுனர் / பயிற்சி பெறுநர்களுக்கு (09) மாதங்கள் சேவைக்காலம் நிறைவு பெற்றபின் வருடத்திற்கு ஏழு (07) நாட்கள் அமைய / சமயோசித விடுமுறை (14) நாட்கள் சுகவீன விடுமுறை பெற்றுக் கொள்ளத் தகுதி பெறுகிறார். (09) மாதங்கள் முடியுமுன் இவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய எந்த விடுமுறையும் பெறுதல் முடியாது.
14. உள் நாட்டில் / வெளிநாட்டில் சம்பளமற்ற விடுமுறைச் சலுகை
அரச அலுவலர் ஒருவரின் திருமணமாகாத பிள்ளை அல்லது வாழ்க்கைத்துணை சுகவீனமுற்று இருந்தால் அரச வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் ஒருவரின் சிபாரிசுக்கு அமைய சிகிச்சை மேற்கொள்வதற்காக ஆகக்கூடிய ஒரு வருட சம்பந்தமற்ற லீவை உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் கழிப்பதற்கு அனுமதி வழங்கப்படும்.
தாய் தந்தை இருவரும் அரசு அலுவலர்களாக இருப்பின் நோயுற்ற பிள்ளையைப் பராமரிக்க மேற்கூறிய சலுகையை இருவரில் ஒருவர் மட்டுமே பெற முடியும். (பொ.நி. 11/2013)
இந்த அரச நிர்வாக சுற்றறிக்கையை (பொ.நி. 11/2013) கீழே பதிவிறக்கம் (Download) செய்ய முடியும்.
15. சில வகை நோய்களால் பீடிக்கப்பட்டவர்களுக்கான விஷேட விடுமுறை
சில குறிப்பிட்ட வகையான நோய்களினால் பிடிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் கூடிய விசேட சலுகை வழங்கப்படுகிறது.
01. காசநோய்
ஒரு தடவை நான்கு (04) மாதங்கள் முழு சம்பளத்துடன் கூடிய விசேட லீவைப் பெறலாம். மீண்டும் அவர் சேவைக்கு சமூகமளித்து நான்கு (04) வருடங்களுக்கு குறையாமல் சேவையாற்றிய பின் மீண்டும் நான்கு 04 மாதங்கள் முழு சம்பளத்துடன் கூடிய விசேட விடுமுறையைப் பெறலாம். இவ்வாறு இரு சந்தர்ப்பங்கள் மட்டுமே இச்சலுகை விடுமுறையைப் பெறமுடியும்.
02. குஷ்ட ரோகம்
22 மாதங்களுக்கு மேற்படாத முழு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை ஒரு தடவை மட்டுமே பெறலாம்.
03. புற்றுநோய்
ஆறு (06) மாதங்களுக்கு மேற்படாத முழுசம்பளத்துடன் கூடிய விசேட விடுமுறையை ஒரு தடவை மட்டுமே பெறலாம்.
04. மேற்பட்ட நோய்களுக்கு சமமான மருத்துவ சபையால் (Medical Board) தீர்மானிக்கப்படும் வேறு எந்த நோய் தொடர்பாகவும் அல்லது மருத்துவ சபையால் சிபாரிசு செய்யப்படும் சத்திர சிகிச்சைக்குப் பின்பு தேவைப்படும் பராமரிப்புக்களின் பொருட்டு ஆறு (06) மாத காலம் வரை முழுச்சம்பளத்துடன் கூடிய விசேட லீவு பெற முடியும்.
16. இளைப்பாறுகைக்கு முன்னரான விடுமுறை
ஒருவர் ஓய்வு பெறும் திகதிக்கு முன்னராக மூன்று (03) மாதங்கள் சம்பளத்துடன் கூடிய இளைப்பாற்றுகைக்கு முன்னரான விடுமுறையைப் பெற்றுக்கொள்ள முடியும். இம் மூன்று மாதகால விடுமுறை அவரது சேவைக்காலத்தில் மீதப்படுத்திய விடுமுறையில் இருந்தும் ஓய்வு பெறும் வருடத்தில் எஞ்சியுள்ள விடுமுறையும் பயன்படுத்த முடியும்.
குறிப்பு :- ஓய்வுபெறும் வருடத்தில் சேவையாற்றும் கால அளவைப் பொறுத்து வருடத்துக்குரிய விடுமுறைைய விகிதாசார முறையிலேயே பெறமுடியும்.
இந்த விடுமுறையை பெற ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்கள் முன் வலயக் கல்வி அலுவலகத்திற்கு கொடுக்க வேண்டிய ஆவணங்கள்.
- ஆசிரியையின் கோரிக்கைக் கடிதம். (அதிபர் ஊடாக)
- முன்னைய ஐந்து வருடங்கள் ஆசிரியை பெற்ற விடுமுறை விபரங்கள் அடங்கிய B-100 (அதிபரின் சிபாரிசு கையொப்பம், அதிபர் ஊடாக)
17. வெளிநாட்டில் படிப்பதற்கான / தொழில் புரிவதற்கான சம்பளமற்ற லீவு
இது பற்றிய விபரம் தாபனக் கோவை அத்தியாயம் XII-16 ஆம் பிரிவு விவரிக்கிறது. சேவையில் உறுதிப்படுத்தப்பட்ட ஓர் அலுவலர் வெளிநாட்டில் படிப்பதற்காக அல்லது தொழில் புரிவதற்காக அல்லது இரண்டிற்குமாக அவரது சேவை காலத்தில் மொத்தம் ஐந்து (05) ஆண்டுகள் சம்பளமற்ற விடுமுறையைப் பெறலாம். உறுதிப்படுத்தப்படாத அல்லது தற்காலிக ஓர் அலுவலருக்கு படிப்பின் பொருட்டு மட்டும் இச்சலுகையளிக்கப்படலாம். படிப்பதற்காக வழங்கப்படும் தொடர்ச்சியான காலப்பகுதி மூன்று (03) ஆண்டுகளுக்கு மேற்படலாகாது. தொழில் புரிவதற்கு மட்டுமே ஐந்து (05) ஆண்டுகள் தொடர்ச்சியாக எடுக்கப்படலாம். (பொது நிர்வாகம் 318/1985)
எவ்வாறிருப்பினும் முதுமாணி (Master) பட்டப் படிப்பின் பொருட்டு வெளிநாடு செல்லும் ஓர் அலுவலருக்கு கலாநிதி (Dr.) பட்டம் பெறும் பொருட்டு மட்டும் தொடர்ந்து ஐந்து (05) ஆண்டுகளை அனுமதிக்கலாம். (பொது நிர்வாகம் 35/91)
இதேபோன்று அரசின் உடன்பாட்டுடன் இலங்கையில் அமைக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம், உலக சுகாதார இயக்கம் போன்ற வெளிநாட்டு முகவர் நிலையங்களில் அவை வெளிநாட்டு நிதியை பயன்படுத்தி முதலீடு செய்யும் கருத்திட்டங்களில் தொழில் புரிவதற்கு (05) ஆண்டுகள் ஓர் அலுவலர் சம்பளம் விடுமுறையைப் பெறமுடியும். (பொது நிர்வாகம் 13/99)
அரசு அலுவலர்களுக்கு தனது சேவை காலத்துக்குள் வழங்கக்கூடிய மொத்த விடுமுறைகள் ஐந்து (05) ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்படும். (பொ.நி. 52/91)
வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக செல்லும்போது ஆங்கில மொழியின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக இலங்கையை விட்டு வெளியேறுமுன் ஐந்து (05) வருட கால சம்பளமற்ற லீவுக்கு மேலதிகமாக மூன்று (03) மாத கால சம்பளமற்ற லீவு அனுமதிக்கலாம். இக்காலப்பகுதியினுல் உரிய மொழிப் பரீட்சைக்குத் தோற்றி தகைமைகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். உரிய மொழி பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அல்லது அது தொடர்பான பாடநெறியினைப் பயில்வதற்காக அரச நிதியினைச் செலவிடக்கூடாது என்பதுடன் இப்பணிக்காக அலுவலர் ஒருவனுக்கு தமது சேவைக் காலத்தில் ஒரு தடவை மாத்திரமே இவ் விடுமுறையைப் பெற்றுக்கொள்ள முடியும். (பொ.நி.7/2013)
அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் ஒழுங்கு சார்ந்த படிப்பு நெறிக்கு மாத்திரமே மேற்படி விடுமுறைகள் வழங்கப்படும். சம்பளம் மற்ற வெளிநாட்டு படிப்பு விடுமுறை தொடர்பில் திணைக்களத் தலைவர் பின்வருவனவற்றை உறுதிப்படுத்தல் வேண்டும்.
- பயிற்சி / படிப்பு அவரின் சேவைக்கு ஏற்புடையது, அவர் கடமையாற்றும் அல்லது அவரின் பதவியுயர்வுக்கு அப்படைப்பு ஏற்புடையது எனவும்,
- இந்தப் படிப்புக்கு புலமைப்பரிசில் திட்டம் திணைக்களத்தில் இல்லையெனவும்,
- இந்தப் படிப்புக்கு இந்நாட்டில் வசதிகள் இல்லை எனவும்.
18. உள்நாட்டில் சம்பளமற்ற சுகவீன விடுமுறை
இதுபற்றிய விபரம் தாபனக் கோவை அத்தியாயம்XII-22 ஆம் பிரிவில் விளக்கப்படுகின்றது.
ஒருவரின் உரிய ஆண்டுக்குரிய முழு விடுமுறைகளும் முற்றுப் பெற்ற பின் மருத்துவ உத்தியோகத்தர் ஒருவரின் சான்றிதழ் மூலம் சுகாதாரக் காரணங்களுக்காக உள்நாட்டில் கழிப்பதற்காக மூன்று மாதங்களுக்கு மேற்படாத சம்பளமற்ற விடுமுறையை திணைக்களத் தலைவர் அனுமதிக்க இடமுண்டு. இந்த விடுமுறையை திணைக்களத் தலைவர் அனுமதிப்பதன் மூலம் அலுவலரின் கடமைக்கு ஏதேனும் இடையூறு ஏற்படாது என்று திணைக்களத் தலைவர் திருப்தி அடைந்தாள் மாத்திரமேயாகும். சம்பளமற்ற விடுமுறை காலப்பகுதியினுள் வருகின்ற சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்கள் சம்பளம் லீவு நாட்களாக கணிக்கப்படல் வேண்டும்.
நன்றிகள்
Mr. S.M.S. Hameed, (Retired F.A. - 1 (Acct))
Mr. S.M.S. Hameed அவர்கள் எழுதிய அதிபர் "ஆசிரியருக்கான நிர்வாக வழிகாட்டல்" புத்தகங்களைப் பெற 0779770369 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கவும் அல்லது எமது Education More News (www.edumorenews.com) ஐ தொடர்பு கொள்ளவும்.