ஆசிரியர் பங்கு 2
கல்விமான்கள் காட்டும் ஆசிரியரின் பல்வேறு பங்குகள்
எமது முதலாவது பகுதியில் ஆசிரியரின் பங்கு என்ற எண்ணக்கரு பற்றி பார்த்தோம். ஆசிரியர் செய்ய வேண்டிய ஆசிரியர்களின் பொறுப்புகளும், கடமைகளும் பற்றியும் அவை காலப்போக்கில் எவ்வாறு விரிவடைந்துள்ளது என்பது பற்றியும் மேலும் விளங்கிக் கொள்வதற்கு ஆசிரியரின் பங்கு பற்றி வெளியிடப்பட்டுள்ள சில கருத்துக்களை ஆராய்ந்து பார்ப்போம். முதலாவதாக ஒரு ஆங்கில கல்விமான் ஆகிய ஓ.எ ஒயசர் என்பவர் எழுதிய (Teacher Pupil and Test) நூலில் காணப்படும் ஆசிரியரின் பங்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
- போதனாசிரியரும் நிபுணரும்
- சாதனை அளவிடுபவரும் மதிப்பிடுபவரும்
- நடத்தை கோட்பாடுகளை வெளியிடுபவரும் நன்னடத்தையை காப்பாற்றுபவரும்
- யாப்பு வல்லுநர்
- நீதிபதி
- பாதுகாப்பு அதிகாரி
- நண்பரும் வழிகாட்டியும்
இவை வகுப்பறை கற்பித்தலை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். ஒயசரின் கவனத்தை ஈர்க்காத இன்னொரு அம்சம் பற்றியும் நாம் இப்போது ஆராய்வோம்.
யுனெஸ்கோ நிறுவனத்தினால் பிரசுரிக்கப்பட்டதும் எம் சம்சியூட்ட என்ற கல்விமானால் எழுதப்பட்டதுமான (Education on the more) (1975) என்ற நூலில் ஒயசரின் கவனத்தை ஈர்க்காத ஆசிரியரின் பங்கு சில குறிப்பிடப்பட்டுன. அவை வருமாறு:
- கற்கும் முறைகளை திட்டமிட்டுச் ஏற்படுத்துபவர்
- மாணவர்களின் சிந்தனையை தூண்டுபர்
- கல்வியின் மூலவளங்களை சேகரித்து பாதுகாப்பவர்
- மாணவர்களின் தேவைகளையும் கல்வியின் நோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் முழு கல்வி செயற்பாட்டையும் ஒருங்கிணைப்பவர்.
இன்றைய ஆசிரியர்களால் வளர்த்துக்கொள்ள வேண்டிய தொழில்சார் திறமைகளை மனதில் கொண்டு (Teacher in a Changing Society) 1974 என்ற நூலில் எழுதிய ஆங்கில கல்வி மான்களாகிய டி.விஞ், டி பீரின் என்பவர்கள் ஆசிரியரின் பங்கு பற்றிய பட்டியலை தொகுத்துள்ளனர் அது வருமாறு:
- உதவியாளர் உதவிச் செயலாளர் ஆகியோரை மிகக் கூடுதலாக பயன்படுத்துபவர்.
- சம்பிரதாய எல்லைகளை கடந்து ஒருங்கிணைத்து கற்பிப்பவர்.
- வெவ்வேறு திறமைகளையும் எண்ணிக்கையையும் கொண்ட மாணவர் குழுக்களை அமைத்து நெகிழும் தன்மை உள்ள நேர வகுப்புகளை நடாத்துபவர்.
- நவீன கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்துபவர்.
- வேறு தொழில்களில் ஈடுபட்ட ஒத்துழைப்பை பெற்று பாடங்களுடன் தொடர்பான செயற்பாடுகளை ஏற்படுத்துபவர்.
- மாணவர்களுக்கு அனுபவங்களையும் செயற்பாடுகளையும் ஏற்படுத்தி கொடுப்பவர்.
- பெற்றோருடன் நட்புறவை வளர்ப்பவர் ஒயசர், சம்சியூட்டர் ஆசிரியரின் பங்கு உடன் ஒப்பிடும்போது இங்கே மிக நவீன கருத்துக்கள் அடங்கி இருப்பதை அறிவீர்கள்.
பொதுநலவாய நாடுகளின் செயலகத்தினால் பிரசுரிக்கப்பட்ட 1978 இல் இலங்கையில் நடத்தப்பட்ட பொதுநலவாய நாடுகளின் ஆசிரியர் வலயத்துள் கல்வி சம்பந்தமான, சேவை கால பயிற்சி வகுப்பின் அறிக்கையில் ஆசிரியரின் பங்கு பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பல்வேறுபட்ட முறைகளைக் கையாண்டு கல்வியூட்டுபவராக இருப்பதுடன் கற்றல், கற்பித்தல் அம்சங்களை சிறந்த முறையில் ஒழுங்கு செய்பவர்.
- வெறும் அறிவை வழங்குவதுடன் மட்டும் நிற்காமல் கிடைக்கப்பெறும் மூலங்களை நன்றாக பயன்படுத்தி மலர்களின் கற்றலுக்குரிய சந்தர்ப்பங்களை ஏற்பாடு செய்பவர்.
- சுயகற்றலைத் தண்டி ஆசிரியர் மாணவர் உறவில் நல்ல மாற்றங்களை புகுத்துபவர்.
- நூதனமான கல்வி நுட்பங்களை மிகக் கூடுதலாக பயன்படுத்துபவராக அதற்கு வேண்டிய அறிவையும் திறமையையும் பெற்றுக் கொள்பவர்.
- பாடசாலைகளில் கடமையாற்றும் ஏணைய ஆசிரியர்களுடன் நட்புறவினை வளர்ப்பவர்.
- பெற்றோருடனும் சமூகத்திலுள்ள ஏனையோர் இடம் நெருங்கிய உறவினை ஏற்படுத்துவதாக இருப்பதுடன் சமூக சேவைகளில் ஈடுபடும் இருப்பவர்.
- பாடசாலைகளில் பாடங்கள் தொடர்பான விடயங்களிலும், ஏனைய விடயங்களிலும் தன்னை தொடர்பு படுத்திக் கொள்பவர்.
- மரபு முறைகளை பின்பற்றும் ஆசிரியர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதனை ஏற்பவர்.
இந்த அறிக்கைகள் மூலம் ஆசிரியரின் வெவ்வேறு பங்குகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன இவற்றில் சில ஆசிரியரின் பிரதான பொறுப்பான கற்பித்தலை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் சில பாடசாலை சமுதாயம் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் ஆசிரியரின் பொறுப்புகளை எடுத்துக் காட்டுவன.
தற்போது ஆசிரியரின் பங்கு காலத்துக்கு காலம் வேறுபட்டு உள்ளது என்பதும் விரிவடைந்துள்ளது என்பதும் உங்களுக்கு தெளிவாகும்.
வெவ்வேறு துறைகளில் ஆசிரியரின் பங்கினை வேறுபடுத்தி அறிதல்
ஆசிரியரின் பங்கு பாடசாலையுடன் நின்று விடுவதில்லை. அது மற்றைய சேவைகளிலும் பார்க்க ஆசிரிய சமூகத்தில் நன்றாக பரந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் குறுகிய காலப் பகுதியினுள்ளும், நீண்ட கால பகுதியினுள்ளும் மனித வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளது. எறிக் கொயில் (Eric Hoyle) என்பவர் ஆசிரியரின் பங்கினை பின்வருமாறு இருபரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளார்.
- தொழில்சார் பங்கு
- சமுதாயப் பங்கு.
தொழில்சார் பங்கு
இங்கே வகுப்பறையில் ஆசிரியர்கள் உள்ள அதிகாரம், தனித்தன்மை, ஒரு முடிவெடுக்கும்போது உள்ள சுதந்திரம் ஆகியன அதிக செல்வாக்குடையன. எனவே ஆசிரியர்கள் பல உப பங்குகளை வகிக்க வேண்டும் என கூறுகின்றார். இவர் 14 முக்கிய உப பங்குகளை குறிப்பிடுகின்றார்.
- சமூகத்தின் பிரதிநிதி
- நீதி வழங்குபவரும் மதிப்பீட்டாளரும்
- அறிவின் மூலவளமாகவுள்ளவரும் கண்டுபிடிப்பாளரும்.
- தீர்மானிப்பவர்
- இரகசிய சோதனையாளர்
- உதாரண புருஷர்
- மாணவர்களின் நோக்கங்களை உணர்பவர்
- மாணவர்களின் அங்கலாய்ப்புகளை நீக்குபவர்
- குழுத்தலைவர்
- பாதுகாவலர்
- எதிர்வாதிகளுக்கு இலக்காக அமைப்பவர்
- நண்பரும் நம்பிக்கைக்குரியவரும்
- விசேட விருப்பத்திற்கும் அன்புக்குரிய பாத்திரமானவர்
- மாணவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை நடாத்துபவர்
சமுதாயப் பங்கு
சமுதாய பங்கினை அவர் மூன்றாக பிரத்துள்ளார்.
- சமுதாய நிலை
- அந்நிலை தொடர்பான நடத்தைக் கோலம்
- சமூகத்தின் எதிர்பார்ப்புகள் (ஆசிரியர் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பது)
ஆசிரியர் தன் பங்கிலே மற்றவர்கள் பற்றி எவ்விதம் சிந்திக்க வேண்டும் என்பது பற்றி ஜெயில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
ஆசிரியர் சமூகத் தலைவர்களை உருவாக்குபவர் ஆகையால் அவர் மற்றவர்களைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது.
கல்விமான்கள் ஆசிரியரின் பங்கினை வெவ்வேறு வகையில் ஆராய்ந்துள்ளனர் என்பது இப்போது உங்களுக்குப் புலனாகும்.
சமுதாய பங்கை இவ்வாறு வகுத்து ஆராயும் போது ஆசிரியர் பங்கை உருவாக்கும் காரணிகளை தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
ஆசிரியர் பங்கை உருவாக்கும் காரணிகள் ஆசிரியருடன் தொடர்பு கொள்கின்றவர்களுக்கேட்ப ஏற்ப ஆசிரியர்கள் பங்கு உருவாகின்றது. ஆகையில் பல சிக்கலான காணிகளின் பெறுபேற்றை அடிப்படையாக கொண்டு ஆசிரியரின் பங்கு உருவாகின்றது என நாம் கருதலாம்.
ஆரம்ப காரணிகள் கீழே தரப்பட்டுள்ளன.
- அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள்
- நிர்வாகிகளின் எதிர்பார்ப்புகள்
- மாணவர்களின் எதிர்பார்ப்புகள்
- பெற்றோரின் எதிர்பார்ப்புகள்
ஆசிரியரின் பங்கினை பின்வரும் வரைபடம் செயல்முறையில் விளக்குகின்றது.
ஆசிரியரின் பங்கு அவ்வக் காலப்பகுதியின் தேவைக்கேற்பவும், அரசாங்கக் கொள்கைக்கமையவும், நாட்டின் சமுதாய இயல்புக்கமையவும் காலத்துக்குக் காலம் மாறுபடும். எனவே ஆசிரியரின் பங்கு பற்றி ஒரு திடமான வரைவிலக்கணம் கூற முடியாது. எனினும் செயல்முறையில் பின்வரும் வகையில் ஒரு கிட்டிய வரைவிலக்கணத்தை கூறலாம். அதாவது ஆசிரியர பங்கை நான்கு துறைகளில் ஆராய்வதாகும்.
- கற்பித்தலோடு தொடர்புடைய வகுப்பறையில் பங்கு.
- முழு பாடசாலையோடும் தொடர்புடைய பங்கு
- பாடசாலை சமூகத்தோடு தொடர்புடைய பங்கு
- தொழில் வளர்ச்சி, ஆளுமை வளர்ச்சி தொடர்பான பங்கு
வகுப்பறையில் கற்பித்தலோடு தொடர்புடைய பங்கினை மூன்று கோணங்களில் பார்க்கலாம்.
- கற்றலில் உதவுபவர்
- வகுப்பறையில் உளவியல் வல்லுநர்
- வகுப்பறை முகாமையாளர்
மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு கோணத்தையும் மீண்டும் சிறப்பாக ஆராயலாம்.
01. கற்றலில் உதவுபவர்
- தீர்மானங்களை எடுப்பவர்.
- கற்றலை திட்டமிடுபவர்கள்
- கற்றலை வழிநடத்துபவர்
- கற்றலை அளவிட்டு மதிப்பிடுபவர்.
02. வகுப்பறையில் உளவியல் வல்லுநர்
- மாணவரின் கற்றலை நோக்கி விருத்தி செய்பவர்
- மாணவர்களின் வழிகாட்டி
- மாணாக்கர்களின் பிரச்சினைகள், குறைபாடுகள், பலவீனங்கள் ஆகியவற்றை பரிகாரம் செய்பவர்.
- சமூக தொடர்புகளில் உதாரண புருஷராக விளங்குபவர்.
03. வகுப்பறை முகாமையாளர்.
- வகுப்பறையின் நிர்வாகி.
- ஒழுக்கத்தை கட்டுப்பாட்டையும் என்பவர்.
- கல்வி தொழில் நுட்பவியலாளர்.
இவ் வேலையையும் வெற்றிகரமாக செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை கையாள வேண்டும்.
- திட்டமிடல்
- திட்டமிட்ட வேலையை ஏற்பாடு செய்தல்
- செயற்படுத்துதல்
- மதிப்பீடு செய்தல்
நாம் இதுவரையும் ஆராய்ந்த, ஆசிரியரின் கற்பித்தலுடன் தொடர்புடைய வகுப்பறையில் ஆசிரியர் பங்கினை கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு மேற்படி வழிமுறைகளையும் கையாளல் வேண்டும்.
முழு பாடசாலைகளிலும் ஆசிரியர் செய்ய வேண்டிய கடமைகள்.
- அதிபரின் தலைமையை ஏற்றுக்கொண்டு பாடசாலையின் நிர்வாகக் கடமைகள் யாவற்றிலும் பங்குகொள்ளல். உதாரணமாக : நேரத்துடன் வரல் பாடசாலையில் குறிப்பிட்ட நேரம் வரையும் சமூகம், அளித்தல் சுற்று நிருபங்களுக்கு ஏற்ப செயற்படல்.
- பாடத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்.
- ஆசிரியர் கூட்டங்களில் பங்கு கொள்வது, ஆசிரியர்களிடையே அந்நியோன்னிய ஒத்துழைப்பை வளர்த்தல்.
- ஏனைய ஆசிகளுடன் தனது தனிப்பட்ட பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி அவற்றை நீக்குதல்.
- பாடசாலை அபிவிருத்தி / நிர்வாக சபையில் உற்சாகத்துடன் செயற்படுதல்.
- மாணவர்களின் விருப்பு வெறுப்புகளையும், திறமைகளையும் பற்றி பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறல்.
- மாணவரின் கல்வி வளர்ச்சி, பாடசாலை வளர்ச்சி ஆகியவற்றில் பெற்றோரின் ஒத்துழைப்பை பெறுதல்.
- பாடசாலையின் உள்ளும், வெளியிலும் மாணவர்களின் ஒழுக்கம் கட்டுப்பாட்டை பேணுதல்.
- தொழில்சார் கலந்துரையாடல்களில் பங்கு கொள்ளல்.
இங்கே மாணாக்கர், ஆசிரியர், பெற்றோர், அதிபர் போன்றவர்களின் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியரின் கடமைகள் விவரிக்கப்பட்டுள்ளன என்பது உங்களுக்கு புலனாகும்.
பாடசாலை சமூகத்திற்கு ஆசிரியர் ஆற்ற வேண்டிய கடமைகள்.
- ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் இடையே தொடர்பினை பேணுதல்.
- சமுதாய வளர்ச்சியில் உதவுதல், சமுதாய வளர்ச்சிக்கு வழிகாட்டுதல், தேவையான சந்தர்ப்பங்களில் தலைமை தாங்கல்.
- பாடசாலை சுற்றியுள்ள பிரதேசத்தில் சமூக, கலாச்சார, சமய நிறுவனங்களில் பங்கு கொள்ளல்.
- சமூக வளர்ச்சிக்கு சமூகத்தின் உதவியை பெறல்.
- அரசாங்கத்தின் அபிவிருத்தி கொள்கைக்கு ஏற்ப சமூக கருத்துகளை மாற்றியமைத்தல்.
கல்வி நவீன என்ன கருத்துப்படி வாழ்க்கை முழுவதும் சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் தொடர்ச்சியாக நடைபெறும் வலிமை வாய்ந்த நிகழ்வு ஆதலால் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வெளியே கல்வி சந்தர்ப்பங்களை நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொழில்சார் வளர்ச்சி, ஆளுமை வளர்ச்சி என்பவற்றில் ஆசிரியரின் கடமைகள்
நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்றும் சந்ததியினரை சீர்திருத்துவதுடன் பிரதேசத்தின் மக்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பதும் தொடர்பான ஆசிரியருக்கு பாரிய பொறுப்புண்டு. எனவே எல்லா வகையிலும் ஆசிரியர் உதாரண புருஷராக விளங்க வேண்டும். இதனால் தான் ஆசிரியர்களுக்கு ஒழுக்கக் கோட்பாடு அவசியமாகின்றது.
தொழிலின் கௌரவத்தை வளர்த்துக்கொள்வது ஆசிரியரின் கடமை இவ்விடயத்தில் ஆசிரியர் கவனிக்க வேண்டிய சில விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- நவீன அறிவியல் விரைவாக வளர்ந்து வரும் இன்றைய சமூகத்தில் ஆசிரியர் நவீன அறிவியலில் நிறைவு பெற்று கொள்ள வேண்டும். புத்தகங்கள், சஞ்சிகைகள் முதலியவற்றை வாசித்தல், கருத்தரங்குகள், கூட்டங்கள் ஆய்வுரைகள் ஆகியவற்றில் பங்குகொள்ளில் பொதுசன தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தல் ஆகியன உதவக்கூடியன.
- விஞ்ஞான, தொழில்நுட்ப யுகத்தில் காலடி எடுத்து வைத்துள்ள நவீன சமுதாயத்திலேயே நாமும் சிக்கலான பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமாகவும் வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கு மாணவர்களுக்கு நவீன முறைகளைக் கையாண்டு கற்பித்தல் வேண்டும். கற்பிக்கும் போது வழமையான விரிவுரையில் இருந்து விலகி வினா எழுப்புதல், உற்று நோக்குதல், பரிசோதனை, கண்டுபிடித்தல், விவாதங்கள் போன்ற நவீன கற்பித்தல் முறைகளில் திறமைகளை வளர்த்துக் கொள்ளல் அவசியம்.
- மாணவர்கள் அதிக நெருக்கமாக உள்ள வகுப்பறைகளில் அவர்களுக்கு நேரடியாக கற்பித்தலிலும் பார்க்க ஒரே நேரத்தில் எங்கும் பரந்துள்ள பலருக்கும் கற்பித்தலை இலகுவாக்குவதற்கு பொதுசன தொடர்பு சாதனங்களையும் ஒரு கல்வி சாதனமாக பயன்படுத்த ஆசிரியர் பழகிக்கொள்ளவேண்டும்.
- கல்வியைப் பொறுத்தவரையில் பரீட்சையை நோக்கமாகக் கொண்டு போட்டி அதிகரித்துள்ளமையால் தனியார் கல்வி நிலையங்கள் பல அதிகரித்துள்ளதாக தெரிகிறது. மாணவர்களின் ஒழுக்க கட்டுப்பாடு தளர்வதற்கு காரணமாக உள்ள இந்த நிலைமையை நீக்குவதற்கு ஆசிரியர் தன் நலத்தை தியாகம் செய்யவும் வேண்டும்.
இத்தகைய மேற்கூறிய சவால்களுக்கு முகம் கொடுத்து ஆசிரியத் தொழிலில் கௌரவத்தை காப்பாற்றுவது ஆசிரியரின் பாரிய கடமையாகும். எனவே நீங்களும் உங்கள் நலத்தை தியாகம் செய்யும் ஆசிரியராக விளங்க வேண்டும்.
நன்றி.