Type Here to Get Search Results !

Teach Info இன் ஆரம்பமும், அறிமுகமும்

Teach Info

Teach Info (Get More Informations) என்பது ஒரு தொழில்முறை கல்வி வகை பிளாட்ஃபார்ம். இங்கே நாங்கள் உங்களுக்கு சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை மட்டுமே வழங்குவோம், நீங்கள் மிகவும் விரும்புவீர்கள். நம்பகத்தன்மையை மையமாகக் கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கல்வித் தகவல்களைப் பகிர்வதில் சிறந்த கல்வி வகைகளை உங்களுக்கு வழங்க நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். கல்வி வகை மீதான எங்கள் ஆர்வத்தை ஒரு வளர்ந்து வரும் ஆன்லைன் இணையதளமாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்களின் கல்வி வகையை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம் என்பதை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறோம்..

எங்களால் முடிந்த அளவு எமது இணையத்தளத்தின் ஊடாக எமது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள தகவல்களை நாங்கள் பரிமாறி இருக்கிறோம் எமது இணையத்தளம் நாங்கள் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மீள் கட்டமைப்பு இன்று முதல் உங்களுக்காக வழங்கப்படுகிறது என்பதை நாங்கள் இந்த அறிமுகத்தின் ஊடாக தெரிவித்துக்கொள்கிறோம். எமது இணையத்தளத்தில் ஆசிரியர்களுக்கு தேவையான தடைதாண்டல் பரீட்சை விபரங்கள் தொடர்பாக எனது கட்டுரைகளை எழுதி வருகிறோம். இலங்கை முழுவதும் தடைதாண்டல் பரீட்சை எழுதிய ஆசிரியர் மாணவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் உங்களுக்கு நாங்கள் தொடர்ச்சியாக அதன் முழு விபரங்களையும் எமது இணையத்தளத்தின் ஊடாக வழங்க காத்திருக்கின்றோம் மேலும் போட்டிப் பரீட்சைகள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான தொடர்பு மென்மேலும் எமது கல்வியில் பங்களிப்பு செய்த பெரியவர்களின் வரலாற்று தொகுப்புகள் அடங்கிய ஆவணங்களை நாங்கள் பதிவிட காத்திருக்கின்றோம்.

ஆசிரியர்களும் மாணவர்களும் அங்குமிங்கும் தேடிச் சென்று பெறக்கூடிய தகவல்களை உங்கள் வீட்டுக்கு நாங்கள் இணையதளம் வாயிலாக வழங்க காத்திருக்கிறோம். நீங்கள் எதிர்பார்க்கும் கல்வி தொடர்பான கட்டுரைகள் ஆக்கங்கள் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இருந்து தொகுத்து நாங்கள் வழங்க காத்திருக்கின்றோம். எங்களால் முடிந்த அளவு உங்களுக்கான எமது இணையத்தளத்தின் மூலமாக பல்வேறுபட்ட தகவல்களை தொடர்ச்சியாக நாங்கள் வழங்க காத்திருக்கின்றோம். எமது இணைய தளத்திற்கு உங்களது ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாக காணப்படுகிறது எங்களது தகவல்கள் நாங்கள் வெளியிடும் தகவல்கள் அடங்கிய விவரங்களை உங்களது ஈமெயில் முகவரிக்கு நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். நாங்கள் வெளியிடும் ஒவ்வொரு கட்டுரைகள் உங்களது இமெயிலுக்கு அந்த கட்டுரைகளில் நோட்டிபிகேஷன் உங்களுக்கு உடனுக்குடன் கிடைக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களது ஈமெயிலை எங்களது இணையதளத்தில் நீங்கள் பதிவு வேண்டியது மட்டுமே.


அதுபோன்று ட்வீட்டர், வாட்ஸ்அப்,  ஃபேஸ்புக் ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களின் ஊடாக எங்களது கட்டுரைகள் வெளிவர காத்திருக்கின்றது. நீங்கள் எங்களது வாட்ஸ்அப் குழுவில் இணைந்து எங்களது கட்டுரைகள் வெளியிடப்படும் பொழுது அதற்குரிய நோட்டிபிகேஷன் நீங்கள் பெற முடியும். அவற்றின் ஊடாக கிடைக்கப்படும் இணைப்பை நீங்கள் அழுத்துவதன் மூலம் எங்களது தகவல்களை உங்கள் விரல் நொடியிலேயே நீங்கள் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை எமது இணையதளம் வழங்குகிறது. இணையதளம் வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு வாடிக்கையாளர்கள் கவரக்கூடிய வகையில் நாங்கள் எங்களது இணைய தளத்தை வடிவமைத்து இருக்கின்றோம். எமது கட்டுரைகள் தொகுப்புக்கள் ஆகியவற்றை தாங்கள் வெளியிடும் பொழுது உங்களது ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். மேலும் உங்களது ஒத்துழைப்பு எங்கள் இணையத்தை மென்மேலும் வளர்ச்சி அடைய செய்யும் என்பதை இந்த நேரத்தில் நான் கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

2021 ஜூன் மாதம் 8ம் திகதி எமது இணையத்தளம் வேலைத்திட்டத்தை ஆரம்பித்த நாங்கள் தற்பொழுது மென்மேலும் எமது நாடு இணையத்தளத்தின் ஊடாக (LK) www.teachinfo.lk ஊடாக வெளிவர காத்திருக்கின்றது அன்று ஆரம்பிக்கப்பட்ட எமது சிறிய முயற்சி இன்று இலங்கையின் இணையதளம் மூலமாக 2022 மே மாதம் 27ம் தேதி மீள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக எமக்கு உங்களது ஒத்துழைப்பும் ஆதரவும் எங்கள் இணையதளத்திற்கு கிடைக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 

அதேபோன்று கல்வியலாளர்கள் கல்வி தொடர்பான விபரங்களை தெரிந்த அனுபவமுள்ள எமது ஆசான்கள் எமது இணைய தளத்திற்கு மென்மேலும், கல்வி தொடர்பான கட்டுரைகள் ஆக்கங்கள் போன்ற தகவல்களை வழங்குவீர்கள் என நாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம். தகவல்களை வழங்கக்கூடிய தன்னார்வமாக வந்து எமக்கு ஆக்கங்கள், கட்டுரைகள் போன்ற வழங்க கூடியவர்களை நாங்கள் எமது இணையத்தளம் வாயிலாக எங்களது தொலைபேசி இலக்கம் வாட்ஸ்அப் இலக்கம் மூலமாக எம்மை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை வழங்க முடியும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று இலங்கையிலுள்ள ஆசிரியர் கலாசாலைகள் பாடசாலைகள் உங்களது மாணவர்களின் பெறுபேறுகளை எமது இணையத்தளத்தின் ஊடாக நீங்கள் பதிவேற்றி உங்கள் மாணவர்களுக்கு இணையதளத்தின் மூலமாக பார்வையிடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றாலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். உங்களது பாடசாலைகள் தொடர்பான சகல விதமான எந்த விவரங்களையும் நாங்கள் பெற்றுக்கொண்டு அதை நாங்கள் பதிவிட இருக்கின்றோம் என்பதை உங்களுக்கு நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Contact Us !

WhatsApp Number : 0777316688
E-mail : edumorenews@gmail.com

நன்றி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.