பகுதி தலைவரின் பொறுப்புகள் மற்றும் கடமைகள்
1. கல்வி தொடர்பான பொறுப்புகள்
- தன் பிரிவில் உள்ள மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கண்காணித்தல்.
- மாணவர்களின் புள்ளிவிவரங்களை பராமரித்தல்.
- ஆசிரியர்கள் பரீட்சை திட்டங்களை சரிபார்த்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல்.
- பாட திட்டம் மற்றும் பாடப்பிரிவுகள் சரியாக முன்னெடுக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தல்.
2. அணுகுமுறை மற்றும் ஒழுக்கம்
- மாணவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தல்.
- மாணவர் பிரச்சனைகளை தகுந்த முறையில் சமாளித்தல்.
- தண்டனை நடவடிக்கைகள் தேவையான சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளுதல்.
3. ஆசிரியர்களுடன் ஒருங்கிணைப்பு
- பிரிவில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுடனும் நெருக்கமான ஒத்துழைப்பை பேணுதல்.
- வகுப்பு ஆசிரியர்களுடன் பணியமைத்தல் மற்றும் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.
- பயிற்சிகள் மற்றும் பயிலரங்குகள் குறித்து தகவல் வழங்கல்.
4. நிர்வாகப் பொறுப்புகள்
- வகுப்பு நேர அட்டவணைகள் ஒருங்கிணைத்தல்.
- வகுப்பு அறைகள் மற்றும் வசதிகளை பராமரித்தல்.
- பரீட்சை ஒழுங்குகள் மற்றும் மதிப்பீட்டு பணிகளில் பங்கேற்பதும் ஒருங்கிணைப்பதும்.
5. அதிபர் மற்றும் பிரதி அதிபர் உதவி
- அதிபரின் வழிகாட்டலுக்கு அமைவாக செயல்படுதல்.
- தேவையான அறிக்கைகள் மற்றும் தகவல்களை பெற்று வழங்குதல்.
- பாடசாலையின் ஒட்டுமொத்த செயற்பாடுகளில் பங்கு பெறுதல்.
6. மாணவர்கள் – பெற்றோர்கள் தொடர்பு
- பெற்றோர்களுடன் சந்திப்பு ஏற்பாடு செய்தல்.
- மாணவர்களின் குறைபாடுகள் மற்றும் தேவைகளை பெற்றோரிடம் பகிர்தல்.
மேலதிக தகவல்கள்
- நிர்வாக விடயங்களில் அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
- ஆசிரியர்களின் நேரசூசியை மேற்பார்வை செய்தல்.
- ஆசிரியர் தரவட்டங்களை உருவாக்குதல்.
- வகுப்பு வட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துதல்.
- ஆசிரியர் தொழில்சார் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குதல்.
- விடுமுறை பெற்ற ஆசிரியருக்குப் பதிலாக ஏற்பாடுகள் செய்தல்.
- மேற்பார்வைப் பட்டியலைத் தயாரித்து தினசரி கண்காணித்தல்.
- பாடசாலை மட்ட கணிப்பீடு மற்றும் பதிவுகளை கண்காணித்தல்.
- மகிழ்ச்சிகரமான கற்றல் சூழலை உறுதிப்படுத்தல்.
- மாணவர்களின் முழுமையான தரவுகளை பேணுதல்.
- நலன் மற்றும் உளவிருத்திசார் செயற்பாடுகளை திட்டமிடல்.
- வினா வங்கி உருவாக்குதல்.
- பௌதீக வசதிகளைப் பதிவு செய்தல்.
- வளக் குறைபாடுகளை கண்டறிந்து தீர்வு காண முயற்சிகள்.
- ஆசிரியர் – பெற்றோர் இடையிலான நல்ல தொடர்பை பேணல்.
- இணைப்பாடவிதானங்களில் மாணவர்களின் பங்குபற்றுதலை உறுதிப்படுத்தல்.
- கலைத்திட்ட முகாமைத்துவக் குழுவுடன் இணைந்து செயற்படல்.
- பொறுப்புகள் அனைத்தையும் முன்மாதிரியாக செயற்படுத்தல்.