ஆசிரியர்களுக்கான லீவுகள்
தாபனக் கோவையின் XII வது அத்தியாயத்தில் லீவு பற்றிய குறிப்பிடுவதுடன் அவ்வப்போது வெளியிடப்படும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் சுற்றுநிருபங்கள் அவற்றை விலகுகின்றன.
"வழங்கப்படும் லீவு" சலுகையே அன்றி உரிமை அல்ல, வழங்கப்படும் லீவுகள் யாவும் சேவையின் வேண்டல்களுக்கும் உடனடி தேவைகளுக்கும் அமைவாக வழங்கப்படுகின்றன. லீவை வழங்கும் அதிகாரி அவற்றை எந்த நேரத்திலும் குறைக்கவோ, இரத்து செய்யவோ அல்லது லீவு வழங்கப்பட்ட வரை திருப்பி அழைக்கவோ முடியும்.
லீவுகள் யாவும் முன் அனுமதி பெற்றே அனுபவிக்க முடியும். இதற்கான விண்ணப்ப படிவம் "பொது 125அ" பயன்படுத்தப்படும். பாடசாலைகளில் ஒவ்வொரு ஆசிரியர்களும் யாவும் லீவுப்பதிவேடு "பொது 190" பதிவுசெய்யப்பட்டு பேணப்படல் வேண்டும். லீவு அனுமதி பெறாமல் சேவைக்குச் சமூகமளிக்காத ஒருவருக்கு தாபனக்கோவை கூறப்பட்டுள்ள விளைவுகள் வருமாறு.
01. தாபனக் கோவை அத்தியாயம் V இல் 7 பிரிவு பின்வருமாறு கூறுகிறது.
லீவு பெறாமல் கடமைக்கு சமூகமளிக்காத உத்தியோகத்தர் சமூகமளிக்காத திகதியிலிருந்து தமது பதவியை விட்டு நீங்கி வராகக் கருதப்படுவார்.
உத்தியோகத்தர் லீவின்றி வராது இருந்ததன் காரணத்தைக் கோருவதற்கோ அல்லது அவருக்கு எதிரான குற்றச்சாட்டை சமர்ப்பிக்கவோ தேவையில்லை.
02. தாபனக் கோவை அத்தியாயம் VII இல் 1.6 ஆம் பிரிவு பின்வருமாறு கூறுகிறது.
லீவு பெறாமல் கடமைக்கு சமூகமளிக்காத காலப்பகுதி ஏதேனுமொன்றின் பேரில் உத்தியோகத்தருக்கு எதிராக எடுக்கக்கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை எதுவாயினும் அக்காலப் பகுதிக்குரிய சம்பளம் எதுவும் வழங்கப்படக்கூடாது.
03. தாமாக பதவி விலகல் (VOP)
ஆசிரியர்கள் தாமாகவே பதவியை விட்டு விலகிய முறையான கடிதத்தை அனுப்பும் அதிகாரம் தற்போது சகல வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அமைச்சரவையின் இல். 2009/ED/E/76 அறிவித்தல் பின்வருமாறு:
2009.02.20 ஆம் திகதி 1589/30 இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் விசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, அரச சேவை ஆணைக்குழுவின் விவகாரங்களின் 1ஆம் பகுதி 172ஆம் ஒழுங்கு விதிகளுக்கமைய திணைக்களத் தலைவருக்கு பதவி விலக்கல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு ஆசிரியர்களின் தாமாகவே/சுயமாகவே பதவியை விட்டு நீக்கியமை பற்றிய அறிவிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான பதவி விலக்கல் அதிகாரம் கல்விச் செயலாளரிடமே உள்ளது.
குறிப்பு : மிகவும் அவசர சந்தர்ப்பத்தில் ஒருவருக்கு சேவைக்கு சமூகம் அளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் அதனை டெலிமெயில் (Telemail) /தொலைபேசிச் செய்தி (Phone Message) / குறுஞ்செய்தி சேவை (SMS) / மின் அஞ்சல் (E-MAIL) அல்லது கடிதம் ஒன்றின் மூலம் பாடசாலை அதிபருக்கு அறிவிக்கவேண்டும். அத்துடன் திரும்பியதும் உரிய லீவு விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதிபரின் அனுமதியைப் பெற அவசியம். (பொ.நி 24/2013)
ஆசிரியர்களின் பின்வரும் லீவுகள் பற்றிய முழு விளக்கங்கள் அடங்கிய தகவல்கள் S.M.S. Hameed ஆசிரியரின் ஆக்கத்தில் இருந்து.
- அமைய லீவு / சமயோசித லீவு (Casual Leave)
- சுகவீன லீவு / பிணி லீவு (Sick Leave/ Medical Leave)
- அரை நாள் லீவு (Half day Leave)
- குறுகிய லீவு (Short Leave)
- ஓய்வு லீவு (Vacation Leave)
- புதிய நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கான லீவு
- பிரசவ லீவு (Maternity Leave)
- தந்தைக்குரிய லீவு (Paternity Leave)
- கருத்தடை சிகிச்சை மேற்கொண்டதற்கான லீவு.
- இத்தா லீவு
- காலம் கடந்த லீவு
- விபத்து லீவு
- பயிலுநர் / பயிற்சி பெறுநர் ஒருவருக்கான லீவு
- உள்நாட்டில் / வெளிநாட்டில் சம்பளமற்ற லீவுச் சலுகை
- சிலவகை நோய்களால் பீடிக்கப்பட்டவர்களுக்கான விசேட லீவு
- இளைப்பாறுகைக்கு முன்னரான லீவு
- வெளிநாட்டில் படிப்பதற்கான / தொழில் புரிவதற்கான சம்பளமற்ற லீவு
- உள்நாட்டில் சம்பளமற்ற சுகவீன லீவு
உரிமைகள் சில பின்வருமாறு
01. அரசியல் உரிமைகள்
02. தொழிற்சங்க உரிமைகள்
இவைகள் பற்றிய விளக்கங்களை எமது தொடர்ச்சியான கட்டுரைகளில் எழுத இருக்கிறோம் ஆசிரியர்களான நீங்களும் வீட்டிலிருந்தவாறே தாபனக்கோவை களில் ஆசிரியருக்கான விடுமுறைகள் பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை கற்றுக்கொள்ள இலகுவாக உங்களுக்கு முடியும் அடுத்தடுத்த ஆக்கங்களில் ஆசிரியருக்கு மிகவும் பொருத்தமான ஆக்கங்களை வழங்க இருக்கிறோம் .
Mr. S.M.S. Hameed, (Retired F.A. - 1 (Acct))