Type Here to Get Search Results !

இலங்கை ஓய்வூதிய திணைக்களத்தால் வழங்கப்படும் அரச ஊழியர்களின் ஓய்வூதிய இலக்கத்தை (W&OP இலக்கத்தை) பெற்றுக் கொள்ளல்.

இலங்கை ஓய்வூதிய திணைக்களத்தால் வழங்கப்படும் W&OP இலக்கம்

ஓய்வூதிய திணைக்களம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான W & OP இலக்கத்தை வழங்குகிறது. இது தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. ஆகவே உங்களது இது வரையிலும் தெரியாதவர்கள் கீழுள்ள இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். தெரிந்தவர்கள் பரிசீலனை செய்து பாருங்கள்.

இதை உங்களது தொலைபேசியில் Screenshot அல்லது Download செய்து கொள்ளுங்கள்.

உங்களது W & OP இலக்கத்தை அறிய கீழுள்ள logo ஐ அழுத்துக.👇

Link 01

இந்த இணையதள முகவரியில் நீங்கள் பரிசீலனை செய்து பார்த்த பிறகு உங்களது Pension Number and Your Detail உம் வரவில்லையா?

நீங்கள் உங்கள் வலயக்கல்வி பணிமனையில் உங்கள் சுயவிவரக் கோவை பொருப்பாளரை/ அலுவலரை சந்தித்து அது பற்றிய விளக்கங்களை கேட்டுக்கொள்ளுங்கள் .
 
இது வரையிலும் நீங்கள் தகவல்களை வலயக்கல்வி பணிமனைக்கு கொடுக்காமல் இருந்தால் உடனடியாகவே சென்று உங்களது ஆவணங்களை அவர்களிடம் கையளியுங்கள்.
 

W & OP இற்கு பதிவு செய்ய நீங்கள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள்.

  1. உங்களது பிறப்புச் சான்றிதழ் (Photocopy) மற்றும் தேசிய அடையாள அட்டை (Photocopy)
  2. உங்களது வாழ்க்கை துணையின் பிறப்புச் சான்றிதழ் (Photocopy) மற்றும் தேசிய அடையாள அட்டை (Photocopy)
  3. உங்களது பராமரிப்பில் உள்ள உங்கள் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் (Photocopy)
  4. வலயக்கல்வி பணிமனையில் பெறக்கூடிய W & OP பதிவுக்கான விண்ணப்பம்.
போன்றவைகளை நீங்கள் கையளிக்க வேண்டும். நீங்கள் இவ்வாறு தகவல்களை கொடுக்கும் போது உங்கள் பெயர் மற்றும் உங்களால் கொடுக்கப்படும் பெயர் விபரங்களை தெளிவாக ஆங்கிலத்தில் எழுதி கொடுக்கவும். காரணம் அவ்வாறு இல்லாதவிடத்து உங்களது பெயரில் சிறு எழுத்துப் பிழைகள் இருந்தால் நாளை அது உங்களுக்கு சிக்கலாக அமைய கூடாது என்பதற்காக. தெளிவாக ஆங்கில கையெழுத்தில் அல்லது கணினி Print எடுத்தும் கொடுக்கலாம்.
 
கொடுக்க வேண்டிய ஆவணங்கள் உரிய நேரத்தில் வலயக்கல்வி பணிமனையில் கொடுப்பது நல்ல விடயம். காலம் தாழ்த்தாமல் கொடுத்து பிறகு ஏற்படும் சிரமங்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.
 
ஏனைய அரச ஊழியர்கள் அவரவர்களுக்கு பொருத்தமான காரியாலயங்களில் இது தொடர்பாக தகவல்களை கொடுக்கவோ? அல்லது பெறவோ முடியும்.
 
 
ஓய்வூதியம் பெற இருப்பவர்கள் மற்றும் பெற்றவர்களுக்கான ஆவணங்கள் கீழே உள்ளது
 
  1. Widows-Affidavit.pdf 🖇️ Download
  2. Widows-Declaration.pdf 🖇️ Download
  3. Data_Entry.pdf 🖇️ Download
  4. Letter-of-consent.pdf 🖇️ Download

 

ஓய்வு பெற்றவர்கள் தங்களது ஓய்வூதிய விபரங்களை பெற்றுக் கொள்ள கீழுள்ள logo ஐ அழுத்தவும்.👇

Link 02 - Enter NIC No to get Application Details

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.