« Previous
தொடர்ச்சி 01
02. ஆசிரியர் மற்றும் அரச சேவை
- ஆசிரியர்களுக்கு அமுலாக்கப்படுகின்ற பிரதான யாப்பு விதிமுறைகள்
- அவைகளில் அரச சேவைகள் ஆணைக்குழுவின் விதிமுறைகள், தாபன விதிக்கோவை, நிர்வாக சுற்றுநிருபங்கள், மற்றும் ஆசிரியர் சேவைப் பிரமானத்தில் அடங்கியிருக்கின்ற விடயங்கள்
- அரச ஊழியர் என்பதிற்கான வரைவிலக்கணமும் ஆசிரியர் என்பவர் அரச ஊழியர் என்பதுவும்
ஆசிரியர் ஒருவர் மேட்படி விடயங்களைப்பற்றிய போதிய விளக்கங்களை பெற்று இருக்க வேண்டும். ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் அதிவிசேட வர்த்தமானி ஆகியவற்றை கீழே காணப்படும் இணைப்பை நீங்கள் அழுத்துவதன் மூலம் நீங்கள் அது பற்றிய மேலதிக விபரங்களை பெறுவதற்கான PDF File உங்களுக்கு கிடைக்கும்.
அதில் ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு இணைப்பே நீங்கள் பெறுவதற்கு இங்கு காட்டப்படும் 15s செக்கன் நேர இடைவேளையின் பிறகு நீங்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு கீழே காணப்படும் அரச சேவை ஆணைக்குழுவின் அதிவிசேட வர்த்தமானியை நீங்கள் நேரடியாக Download Now என்ற குறியீட்டை அழுத்துவதன் மூலம் அதனை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு 1885-38_T_2
அரச சேவை ஆணைக்குழுவின் அதிவிஷேட வர்த்தமானி 1589_30_t-2009
இல 1885/38 மற்றும் 2014.10.23ம் திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலமாக தாபிக்கப்பட்ட 2008.07.01ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்பட்ட புதிய ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு விதிகளுக்கமைய உள்வாங்கல், பதவி உயர்வு மற்றும் அதற்கு உரித்தான சம்பளத் திருத்தங்களின் போது மற்றும் 1994.10.06ம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு விதிகள் மற்றும் அதற்கமைவாக இடைக்கிடையே வெளிவந்த திருத்தப்பட்ட சுற்றுநிருபங்களுக்கு அமைவாக செயற்படும் போது வெவ்வேறு பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகள் எழுந்துள்ளதாக மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களோடு, ஆசிரிய தொழிற் சங்கங்களினால் முன்னிலைப்படுத்தப்பட்ட கடிதம் மற்றும் கோரிக்கைகள் மூலமாக அறியக் கூடியதாக இருந்தன. அதன்படி, அத்தகைய விடயங்களுக்கான விளக்கங்களை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதுடன் ஆசிரியர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சேவை தொடர்பான முரண்பாடுகளை சீர் செய்வதற்காக பின்வரும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுற்றுநிருபம் ஒன்றை 2019.03.06 அன்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கீழே காணப்படும் இணைப்பை நீங்கள் அழுத்துவதன் மூலம் நீங்கள் அது பற்றிய மேலதிக விபரங்களை பெறுவதற்கான சுற்றுநிருபம் PDF File உங்களுக்கு கிடைக்கும்.
03. ஆசிரியர் சேவைக்கு ஆட்களை சேர்த்துக்கொள்ளல் மற்றும் நியமனம் வழங்குதல்
- ஆசிரியர் சேவை பரிமாணத்தின் அடிப்படையில் ஆசிரியர் சேவையில் உள்ள தரங்கள் மற்றும் வகுப்புகள்
- ஆசிரியர் சேவையில் சேர்த்துக் கொள்ளும் போது இருக்க வேண்டிய தகைமைகள் நிபந்தனைகள் தேவைப்பாடுகள்
- பொதுவான விடயங்கள் குறித்து விடயங்களிலும்
- நியமனக் கடிதம்
இலக்கம் இரண்டில் ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து வாசித்து ஆசிரியர் சேவை பிரமாணக் இன் அடிப்படையில் ஆசிரியர் சேவையில் உள்ள தரங்கள் மற்றும் வகுப்புகள் பற்றிய அறிவை ஆசிரியர் ஒருவர் பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் ஆசிரியர் சேவையில் சேர்த்துக் கொள்ளும்போது இருக்க வேண்டிய தகைமைகள், நிபந்தனைகள், தேவைப்பாடுகள் பற்றிய விளக்கங்களும் அந்த ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அது பற்றிய பொதுவான விடயங்களும் நியமன கடிதம் பற்றிய உலகங்களும் ஒரு ஆசிரியரின் கட்டாயம் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
04. சுயவிபரக்கோவை
- சுயவிபரக்கோவையின் முக்கியத்துவமும் அதனை வேண்டியவர்களும் பேண வேண்டியதன் முக்கியத்துவம்
- சுயவிபரக்கோவை ஒன்றில் உள்ளடக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
ஆசிரியர் ஒருவர் நியமனம் கிடைத்து அவர்களின் குறிப்பிடப்படும் ஆவணங்களை வலயக் கல்விப் பணிக்கு உரியவேளையில் சமர்ப்பித்தல் வேண்டும். மேலும் தங்களுக்கு வழங்கப்பட்ட நியமனம் தொடர்பான கடிதங்களையும் அது தொடர்பான விபரங்கள் உள்ளடக்கியதாக வலயக்கல்விப் பணிமனையில் ஆசிரியர் ஒருவரின் சுயவிபரக்கோவை பராமரிக்கப்பட்டு வரும். ஒரு ஆசிரியருக்கு சுயவிபரக்கோவை எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது, என்றால் ஒரு ஆசிரியர் அவர் இளைப்பாறும் வரைக்கும் அவரது சுயவிபரக்கோவையை அவரது பதவி உயர்வுகள், அவரது சம்பள விபரங்கள், அவரது ஒழுக்க விழுமியங்கள் போன்ற மேலும் பல வகையான ஆவணங்களை உள்ளடக்கியதாக இந்த சுயவிபரக்கோவை வலயக் கல்விப் பணிமனையில் தயாரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவரும் இந்த சுயவிபரக்கோவையில் ஏதேனும் எமது ஒரு ஆவணம் விடுபட்டு இருக்கின்றதா? என்பதை ஒரு ஆசிரியர் கட்டாயம் தமக்கு பொறுப்பான வலயக்கல்விப் பணிமனைக்குச் சென்று விசாரித்தல் வேண்டும். விசாரித்து தனது சுயவிபரக்கோவை ஏதேனும் ஆவணங்களில் ஒன்று கூட விடுபட்டு இருந்தாலும் அவற்றை உடனடியாக உரிய அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைத்து தனது சுயவிபரக்கோவை கோவையை பூரணமாக முழுமைப்படுத்த வேண்டும். அதில் ஒன்று கூட விடுபட்டாலும் எமது சம்பள அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வுகளில் தாமதம் ஏட்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே சகல ஆசிரியர்களும் தங்களது சுயவிபரக்கோவையை பூரணப்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அரசு ஊழியர்களை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சுயவிபரக்கோவை ஆகும். அரச ஊழியர்களின் முதல் நியமனம் தொடக்கம் ஓய்வு பெறும் வரையான சேவை தொடர்பான அனைத்து விடயங்களும் இதில் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும். இந்த சுயவிபரக்கோவையை ஒரு ஆசிரியரின் முதல் நியமனம் தொடக்கம் ஓய்வுபெறும் வரையான காலப்பகுதியில் சேர்க்கப்பட வேண்டிய ஆவணங்கள் இருக்கின்றன. அவ்வாறான ஆவணங்கள் என்னவென்பதை கீழே பார்க்க இருக்கின்றோம்.
- நியமனக் கடிதம்
- முதலாவது நியமனம் நிரந்தர நியமனம் அல்லாவின் ஓய்வூதிய கொடுப்பனவுகள் நிரந்தர நியமனக் கடிதம்.
- முதலாவது நியமனம் தற்காலிக நியமனம் ஆயினர் வழங்கப்பட்ட நிரந்தர நியமனக் கடிதம்.
- முதலாவது நியமனம் சம்பளமற்ற நியமனம் ஆயின் பின்னர் வழங்கப்பட்ட நிரந்தர நியமனக் கடிதம்.
- நியமனத்தில் ஏற்பட்டுள்ள ஏதேனும் மாற்றம் பயிலுனர் நியமனம் கிடைத்தவர்கள் பட்டதாரி நியமனத்திற்கு மாற்றக்கூடிய கடிதம்.
- பிறப்பு சான்றிதழின் மூலப்பிரதி
- முதலாவது நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் என்பதற்கு இடையே வித்தியாசங்கள் காணப்படுமாயின் அது தொடர்பாக திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது திருத்தப்பட்ட நியமன கடிதம்.
- மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் தங்களது பெயரில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பின் அது தொடர்பாக மாற்றம் செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழின் பதிமூன்றாம் இலக்க பந்தியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் அல்லது திறைசேரி 185 ஆம் இலக்க பிரகடனம் அதாவது சத்தியக்கடதாசி.
- தேசிய ஆள் அடையாள அட்டையின் பிரதி
- ஒப்பந்த பத்திரம் (பொது 160)
- பிரகடனம் (பொது 278)
- சத்தியப் பத்திரம் அல்லது உறுதியுரை (அரசியல் யாப்பின் 6 ஆவது திருத்தத்திற்கு அமைவாக)
- சொத்துக்கள் பற்றிய விபரம் (பொது 261)
- முதல் நியமனத்திற்கு அமைவாக சேவையை ஏற்றுக் கொண்டதற்கான லொக் குறிப்பு அத்துடன் தங்களது நியமனம் பற்றி வழங்கப்பட்ட மாற்றங்கள் பற்றிய Log லொக் குறிப்பு.
- முதல் நியமனம் தின் அடிப்படையில் சேவையை பாடசாலையில் பொறுப்பேற்காது இனிய திணைக்களத்தில் வலயக் கல்விப் பணிமனையில் வேறு இடங்களிலோ பொறுப்பேற்று இருப்பின் அது பற்றிய அதற்கான சான்று.
- வைத்திய அறிக்கை (பொது 169)
- முதலாவது நியமனத்தில் இருந்து ஒற்றைப் படுத்தப்பட்ட வரலாற்றுப் பத்திரம் (பொது 53)
- திருமணமானவரா யின் திருமணச் சான்றிதழ்
- திருமணமானவராயின் கணவனின் அல்லது மனைவியின் பிறப்புச்சான்றிதழ்.
- விவாகரத்து பெற்றிருப்பின் விவாகரத்துக்கான சான்றிதழ்
- துணை மரணித்திருப்பின் மரணச் சான்றிதழ்
- குழந்தைகள் இருப்பின் அவர்களது பிறப்புச் சான்றிதழ்
- அனைத்து கல்வி சான்றிதழ்களும் (க.பொ.த சா/த, க.பொ.த உ/த, பட்டம், பட்டப்பின் கல்வி டிப்ளோமா, உயர் கல்வித் தகைமைகள்)
- அனைத்து தொழிற்பயிற்சி தொடர்பான சான்றிதழ்கள் (ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியல் பட்டப்பின் படிப்பு போன்றன)
- அனைத்து கல்வி மற்றும் தொழில் பயிற்சி சான்றிதழ்களினதும் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்.
- தகுதிகாண் காலப்பகுதியின் பின்னர் சேவை நிரந்தரமாக பட்டதற்கான கடிதம்.
- தகுதி காலப்பகுதி நீடிக்கப்பட்டு இருப்பின் அது தொடர்பான கடிதம்.
- ஆசிரியர் பதிவிலக்கம்
- விதவைகள்/தபுதாரர்கள் அனாதைகள் ஓய்வூதியப் திட்டத்திற்கு பதிவு செய்வதற்கான விண்ணப்பம் மேற்படி பதிவு செய்து பெற்ற விளக்கம் கொண்ட அட்டைஇடமாற்ற கடிதம் அதாவது தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான இடமாற்றம் பெற்று இருப்பின் அது தொடர்பாக அந்தந்த திணைக்களத்தால் அல்லது மாகாண சபையில் இருந்து விடுவிப்பதற்கான கடிதம்.
- தேசிய பாடசாலை மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான இடமாற்றம் பெற்று வந்திருப்பேன் வாகன சேவை மற்றும் மத்திய அரசின் சேவைக்கு உள்வாங்கப்பட்ட தற்கான கடிதம்.
- ஒவ்வொரு வருடத்திலும் சம்பளப்படியேற்றம் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பம்.
- ஒவ்வொரு வருடத்திலும் சமர்ப்பிக்கப்படுகின்றன தரக் கணிப்பீட்டுப் படிவம்.
- வருடாந்த விடுமுறை விபரம் (B 100 படிவத்தில் பூரணம் படுத்தல் வேண்டும்)
- சம்பளமற்ற விடுமுறைக்காக சேகரித்துக்கொண்டு உள்ள விடுமுறைகள் மாற்றீடு செய்யப்பட்டிருப்பின் அதற்கான அனுமதி கடிதம்
- புதிய சேவை பிரமாணத்தின் அடிப்படையில் வினைத்திறன் தடை தாண்டல் பூரணமாக்கப்பட்ட அதற்கான கடிதம்
- சேவையில் உயர்தர பெற்றிருப்பின் அது குறித்து கடிதம்
- தரம் உயர்வாக சம்பளம் மாற்றம் செய்வதற்கான கடிதம்
- ஏதாவது சம்பள உயர்வுகள் ஏற்பட்டிருப்பின் சம்பள திருத்தம் செய்த கடிதம்
- இடம் மாற்றங்களுக்கான கடிதம் மாற்றத்தின் அடிப்படையில் சேவை பெற்ற கடிதம்
- தற்காலிகமாக இடமாற்றம் பெற்று இருப்பின் அதற்கான கடிதம்
- அதற்கான கால நீடிப்பு செய்யப்பட்டிருப்பின் அதற்கான கடிதம்
- கல்விக்கான விடுமுறை பெற்றிருப்பின் அதற்கான கடிதம்
- கல்வி விடுமுறைக்கான பிணை அல்லது வேறுபிணை வெளிநாட்டு விடுமுறை பெற்ற பின் அந்த விடுமுறைக்கு அனுமதி பெற்ற கடிதம்
- வெளிநாட்டு விடுமுறைகள் திருத்தப்பட்டு இருப்பின் அதற்கான கடிதம்
- அரசுக்கு சொந்தமான வீடுகளில் தங்கி இருப்பின் குறித்த வீட்டுக்கான வாடகை சம்பளத்தில் கழித்த பத்திரம்
- சேவை மதிப்பீட்டுச் சான்றிதழ்
- ஒழுக்காற்று கட்டளை
- ஒழுக்காற்று கட்டுப்படுத்துவதற்கான கடிதம்
- ஒழுக்காற்று கட்டளை தொடர்பாக மேன்முறையீட்டு செய்யப்பட்டிருப்பின் அந்த மேல்முறையீட்டில் அடிப்படையில் ஏதும் சலுகைகள் வழங்கப்பட்டால் குறித்த கடிதம்
- மொழித் தேர்ச்சி குறித்த சான்றிதழ்
- கடன் அட்டை
- ஏதாவது ஒரு நோய் ஒன்று தொடர்பாக வைத்திய குழு ஒன்று முன்வைக்கப்பட்டு அது தொடர்பான அறிக்கை
- இலங்கை அதிபர் சேவைக்கு விண்ணப்பித்து இருப்பின் குறித்த விண்ணப்பத்தின் பிரதி
- அதிபர் சேவைக்கு நியமனம் கிடைத்திருப்பின் நியமன கடிதம்
- குறித்த சேவையில் பதவி ஏற்பதற்கான கடிதம் மற்றும் பதிவு
- சேவைக்கான சம்பளம் மாற்றத்திற்கான கடிதம்
- ஆசிரியர் சேவைக்கு முன்னதாக வேறு சேவையில் இணைந்து இருப்பின் குறித்த நியமன கடிதம் மற்றும் குறித்த சேவையில் இருந்து விடுவிப்பு கடிதம்
- முன்னைய சேவையில் இருந்து விடுவிக்கப்பட்ட அதற்கான கடிதம்
- முன்னய சேவைக்காக ஆவணங்கள் சேவை காலத்தின் சேவையை விட்டு விட்டுச் சென்ற பின் அது குறித்த கட்டளை
- பிரசவ விடுமுறை பெற்றிருப்பின் அதற்கான அனுமதி கடிதம்
- சம்பளமற்ற விடுமுறை பெற்றிருப்பின் அது தொடர்பான அனுமதி கடிதம்
- மேற்படி விடுமுறைகளில் முடிவில் சேவைக்கு வந்து இணைந்து குறித்த கடிதம்
- சொத்து கடன் பெற்றிருப்பின் குறித்த கட்டளை அனுமதிக்கான கடிதம்
- தேர்தலில் போட்டியிடுவதற்கு விடுமுறை பெற்றிருப்பின் அதற்கான அனுமதி கடிதம்
- பாதுகாப்பு படைக்கு விடுவிப்பதற்கான விண்ணப்பம்
- பாதுகாப்பு பணிக்காக விடுவிக்கப்பட்டு இருப்பின் அதற்கான கடிதம்
- பாதுகாப்பு படையின் சேவையை முடித்துக்கொண்ட கடிதம்
- சேவை இணைப்புக்கான கடிதம்
- அதற்கான காலநீட்டிப்புக் கடிதம்
- குறித்த இணைப்பு செய்து அதற்கான கால முடிவில் மீண்டும் சேவை பொறுப்பேற்றுக்கொண்டதை அறிவிக்கும் கடிதம்
- ஒரு சேவைக்காக இரட்டை நியமன அடிப்படையில் நியமனம் கிடைத்தபின் குறித்த நியமனக் கடிதம்
- அந்த சேவைக்கு விடுவிக்கும் கடிதம்
- குறித்த சேவை முடிவில் முன்னைய சேவையில் இணைந்ததை தெரிவிக்கும் கடிதம்
- ஏதாவது ஒரு சேவைகள் பதில் கடமையாற்றி இருப்பின் அதற்கான விண்ணப்பம்
- பதில் கடமைக்கான நியமன கடிதம்
- சேவை பொறுப்பேற்ற கடிதம்
- சேவை நீடிப்பு கடிதம்
- தனது சேவையில் இருந்து தானாக விலகிக் கொள்வதற்கான கோரிக்கை கடிதம்
- சேவையில் தானாக விலகிக்கொண்டது தொடர்பான நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதற்கான கடிதம்
- அவசர விபத்து இழப்பீடு பெற்றிருப்பின் இழப்பீடு விண்ணப்பம்
- அவசர விபத்து இழப்பீட்டு அனுமதி வழங்கப்பட்ட கடிதம்
- இழப்பீடு வழங்கிய கடிதம் அல்லது குறிப்பு
- தங்கி இருப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கி இருப்பின் அதற்கான கடிதம்
- சேவையில் இருந்து இருக்கும்போது மரணமடையும் மரணப் பதிவு சான்றிதழ்
- விதவைகள், அனாதை கொடுப்பனவு தொடர்பில் ஓய்வூதிய திணைக்களத்திற்கும், பிரதேச செயலகத்துக்கும் அனுப்பிய கோவைகளின் பிரதி
- மரணப் பணிக்கொடை தங்கி வாழ்பவர்களுக்கு வழங்கிய கடிதம்
- கொடுப்பனவு செய்த கணக்கு மற்றும் பங்குகள் விபரம்
- சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பம்
- ஓய்வு பெறுவதற்கான கடிதம்
- ஒன்லைன் ஊடாக ஓய்வூதியத்திற்கு தகவல் அனுப்பிய PD 3 படிவம்
- ஓய்வூதியம் கணக்கிடப்பட்ட படிவம்
- ஓய்வுக்கு முந்திய விடுமுறை பெற்றிருந்தால் விடுமுறை அனுமதிக் கடிதம்.
மேட்படி தகவல்கள் இணையத்தளங்களிலும் தொடர்பான ஆசிரியர்களிடமும் இருந்து பெற்றுக்கொண்டது.
05. தகுதிகாண் காலப்பகுதி மற்றும் சேவையை நிரந்தரமாக்கல்
- தகுதிகாண் காலப்பகுதி மற்றும் தகுதி காலப்பகுதியை நீடித்தல் தொடர்பான விதிமுறைகள்
- சேவையை நிரந்தரமாக்கல் தொடர்பான நடைமுறைகளும் விதிமுறைகளும்
தகுதிகாண் காலப்பகுதி என்பது மூன்று வருடங்களைக் கொண்டதாக ஆசிரியர் செவைக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தகுதிகாண் காலப்பகுதியை திருப்திகரமாக பூரணப்படுத்தும் ஆசிரியருக்கு சேவையை நிரந்தரம் ஆக்குவதற்கான அனுமதி நான்காவது வருடத்திலிருந்து கிடைக்கும். மூன்று வருட சேவை காலத்தை பூர்த்தி செய்த சகல ஆசிரியர்களும் தங்களது வலயக் கல்விப் பணிமனையில் சேவையை நிரந்தரமாக்கல் தொடர்பான விண்ணப்பப் படிவத்தினை பெற்று பூரணப்படுத்தி வலயக் கல்வி அலுவலகம் ஒப்படைத்தல் வேண்டும்.
சுற்றறிக்கை
தொடரும்.....📝🖊️