அறிமுகம்
மாணவர்களின் உடல் வளர்ச்சி விவேக வளர்ச்சி சமூக வளர்ச்சி மன எழுச்சி வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய இவை மூலம் அசாதாரண பிள்ளைகளையும் அறிந்திருக்கும் ஆசிரியர்கள் இவற்றின் நோக்கம் மாணவரின் வளர்ச்சியையும் தனியார வேறுபாட்டையும் விளக்குவதாகும் மாணவர்களைப் பொறுத்தவரையில் ஆசிரியருக்கு பரந்த பொறுப்பு உண்டு என்பது தற்போது தெளிவாகும்.
சமூகத்தைப் பொறுத்த வரையிலும் ஆசிரியருக்கு பெரிய பொறுப்பு உண்டு. தொழில் மதிப்பை பாதுகாத்துக்கொள்வது ஆசிரியரின் கடமை ஆசிரியர் என்ற முறையில் உங்களிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்புகளையும் கடமைகளையும் நன்றாக விளங்கி இருந்தால் தன்னம்பிக்கையுடன் சிக்கல் இன்றியும் அமைதியாகவும் ஒத்துழைப்புடனும் திறமையாகவும் வெற்றிகரமாகவும் கடமை ஆற்ற முடியும் ஆசிரியரின் பங்கு என்ற இந்த தலைப்பில் ஆசிரியரின் கடமைகளை சரிவரச் செய்வதற்கு உங்களுக்கு வழிகாட்டும்.
பங்கு என்றால் என்ன?
நியுயோக்கில் (New York) உள்ள மிக்சிக்கள் பல்கலைகழகத்து இரு அமெரிக்க கல்விமான்கள் ஆகிய வில்பபீர் புறூக்கோவர் (Wilburd Brookover) மற்றும் டேவிட் கொட்டிப் (Davib Gottiah) எழுதிய கல்வியில் சமூகவியல் (A Sociology of Education) என்ற நூலில் பங்கு என்றால் என்ன? பகுதியில் பங்கு என்பது இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
ஒன்றுடன் ஒன்று தொடர்பான நிலை, தகுதி, பதவி, பங்கு என்ற ஒன்றுடன் ஒன்று தொடர்பான எண்ணக்கருக்களுக்கு வரைவிலக்கணம் கூறும்போது பங்கு என்பது ஏனைய எண்ணக்கரு கண்களிலிருந்து வேறுபடும் வகையை காட்டியுள்ளார்கள். பங்கு என்ற எண்ணக்கருவை நன்றாக விளங்கிக் கொள்வதற்கு மேற்படி எண்ணக்கருக்கள் கீழே தரப்பட்டுள்ளது.
நிலை
நிலை என்னும்போது ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரு சமூக குழுவில் தனியாட்கள் வகிக்கும் இடம், உதாரணமாக தாய், தந்தை, மகள், மகன், கமக்காரன், குரு ஆகியவற்றைக் காட்டலாம். பாடசாலை என்ற நிறுவனத்தின் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் என்ற பிரிவினர் உள்ளனர். இந்த நிலை என்ற சொல் இத்தகைய பிரிவினை குறிக்கும். இவ்வாறு "ஆசிரியர்" என்பது ஓர் நிலையாகும்.
தகுதி
ஒரு தகுதியை உடையவர் உடன் பல்வேறு தனிநபர்கள் தொடர்பு கொண்டிருப்பர். ஒரு நிலையை வகிப்பவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி இத்தனி நபர்கள் சில எதிர்ப்புகளை கொண்டிருப்பர். இவ் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவர் நடந்து கொள்ள வேண்டும். இவ் எதிர்பார்ப்புகளை அவரின் தகுதியை வரையறுக்கும். ஒரு நிலையில் நியமிக்கப்பட்டவர்கள் அந்த நிலைக்கு உரிய தகுதியை பாதுகாக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இதன் மூலம் அவர் நிலைக்குரிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். ஒரு வைத்தியரிடம் இருந்து சமுதாயம் எதிர்பார்ப்பது நோய்க்கு சிகிச்சையாகும். சட்ட வல்லுநர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது சட்ட ஆலோசனைகளை அல்லது சட்ட விளக்கத்தை ஆகும். இதுதான் அவர்களுடைய தகுதி இதன் பிரகாரம் சமுதாயம் ஓர் ஆசிரியரிடம் இருந்து எதிர்பார்ப்பது "படிப்பித்த (கற்பித்தல்)" இது ஆசிரியரின் தகுதியாகும்.
பதவி
ஒரு நிலையை உடையவர்களிடம் பல பிரிவுகள் உண்டு இதன்படி ஆசிரியரின் நிலை
i. பாடங்களுக்கும் பொறுப்பு
ii. வகுப்புகளுக்கு பொறுப்பு
iii. வேறு அம்சங்களுக்கு பொறுப்பு
என வேறுபடும். இதன்படி முதலாம் தரத்திற்கு பொறுப்பான ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பொறுப்புகள் இரண்டாம் தரத்திற்கு பொறுப்பான ஆசிரியரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பொறுப்புகளிலிருந்து வேறுபடும். ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வெவ்வேறு கடமைகள் "பதவி" எனப்படும்.
பங்கு
குறிப்பிட்ட ஒருவர் ஒருநிலையில் நியமிக்கப்பட்டுள்ளார் என கொள்வோம் அவரிடமிருந்து சில விசேட பொறுப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நிலைக்கு வேறு ஒருவர் அமர்த்தப்பட்டாலும் அதே பொறுப்புகள் அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. உதாரணமாக கமல் என்பவர் ஆங்கில ஆசிரியராக நியமிக்கப் பட்டுள்ளார் என கொள்வோம். திருமதி சுப்பிரமணியம் என்பவரும் ஆங்கில ஆசிரியையாக நியமிக்கப்பட்டால் இவர்கள் இருவரும் எல்லா அம்சங்களிலும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல ஆயினும் ஒரே நிலையில் இருப்பதனால் ஒரே பொறுப்புக்களை உடையவர்கள் ஆகின்றனர். "பங்கு" என்பதில் விளங்கிக்கள்வது ஒரு சேவை அல்லது ஒரு தொழில் உள்ள நிலைக்குரிய கடமையாகும்.
இந்த கடமைகளை செவ்வனே நிறைவேற்ற சில அதிகாரங்கள் தேவைப்படும். இந்த அதிகாரங்களை பிறக்கும்போது பொறுப்புடன் செயற்பட வேண்டும் பொறுப்புடன் செயல்படும் போது நிலையின். கௌரவத்தை பாதுகாத்தல் வேண்டும், இது தொடர்பாக நடத்தையையும் இதுபற்றி கடமை முறைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. ஒரு தொழில் அல்லது ஒரு சேவைகள் நியமிக்கப்பட்டுள்ள ஒருவரின் பங்கு நிலைக்குரிய அதிகாரம், பொறுப்புகள், கடமைகள், நடத்தைகள் ஆகியவற்றின் ஒன்றுடன் ஒன்று தொடர்புற்ற செயற்பாடாகும். பங்கின் இயல்புகள் ஒரு நிலை அல்லது ஒரு பதவியில் உள்ளவர் இடமிருந்து சமுதாயம் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புகளில் உருவாகும். இதன்படி பங்கு எனப்படுவது ஒரு நிலையிலிருந்து ஒரு சமுதாயத்தினர் எதிர்பார்க்கப்படுவதால் உருவாக்கப்படும் நடத்தைத் தொகுதி என வரையறுக்கப்படும். இங்கே காணப்படும் படம் பங்கு என்பதனை விளக்குகிறது.
"பங்கு" என்பதனை அறிந்து கொண்டோம் இனி "ஆசிரியரின் பங்கு" என்பதனை ஆராய்வோம்.
ஆசிரியரின் பங்கு என்றால் என்ன?
ஆசிரியரின் பங்கு பற்றிய என்ன கருத்தை எளிதில் விளங்கிக் கொள்வதற்கு முதலில் ஆசிரியர் பற்றிய விளக்கத்தை பெறுவோம். கற்பித்தல் தொழிலை செய்யும் எவரும் ஆசிரியர் என கருதலாம் எனினும் கற்பித்தலில் ஈடுபடும் சமய முதல்வர்கள், தத்துவஞானிகள் தவிர்ந்த ஏனையோர் ஒரு நிறுவனத்தில் கற்பித்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளோரை அவர்களை நாம் ஆசிரியர் என்று குறிப்பிடுவோம். ஆசிரியரின் சேவைக்கும் சமுதாயத்தின் எதிர்பார்ப்புக்கும் அமைய ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அவர்களது கடமைகளும் பொறுப்புகளும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. ஆசிரியருக்கு உள்ள இந்த பரந்த பொறுப்பு ஆசிரியரின் பங்கு என சுருக்கமாகக் கூறலாம். மேலும் தெளிவாக கூறுவதானால் ஆசிரியர் என்ற பதவி பெயருக்குரிய பொறுப்புகள், அதிகாரங்கள், கடமைகள் நடத்தை ஒழுங்கு சமுதாயத்தின், எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப ஆசிரியர் பங்காகும் ஆசிரியரின் பங்கு விஞ்ஞான அடிப்படையில் ஆராய்வோம். ஆசிரியரின் பங்கு மாணவர்களை நன்றாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம்.